கொலையை விபத்தாய் மாற்றிய உறவினர்கள் 7 பேர் கைது !

0
சத்திய மங்கலத்தை அடுத்த தாளவாடி மல்லன்குழி கிராமத்தில் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர்களது உறவினர்கள் 7 பேரைப் பிடித்து தாளவாடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
கொலையை விபத்தாய் மாற்றிய உறவினர்கள்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகண்ணா மனைவி ராஜம்மாள் (40.) இவரது மகள் கீதா (18). 


நாகண்ணா கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இறந்து விட்டதால் ராஜம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.  

இந்நிலையில்,  ராஜம்மா, கீதா இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண் டிருந்தனர். அப்போது குடிசையில் திடீரென தீப்பிடித்ததில் இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 

தாளவாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது, இருவரின் உடல்களும் தீயில் கருகிய நிலையில் இருந்தது. 


எனவே, சத்திய மங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேலை சம்பவ இடத்துக்கு வரவழைத்து இருவரது உடல்களும் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டன.

இது குறித்து தாளவாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் பணம் மற்றும் சொத்துப் பிரச்னை காரணமாக ராஜம்மாளின் கணவர் நாகண்ணாவின் உறவினர் களுக்கும், 

ராஜம்மாளின் தாய் வீட்டினருக்கும் இருந்த பிரச்னை காரணமாக குடிசைக்குத் தீ வைத்ததாக கூறப்படு கிறது. 

இந்நிலையில் இது தொடர்பாக தாளவாடி போலீஸார் மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த 7 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 


குடிசைக்குத் தீ வைத்து தாய் மற்றும் மகளைக் கொன்று விட்டு, விபத்து போல நாடகமாடிய உறவினர்கள் கைது செய்யப் பட்டிருப்பது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings