ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஆந்திர மக்களுக்காகப் பல சிறப்பு நலத் திட்டங்களைச் செய்து வருகிறார். இந்நிலையில், படலா கஸ்தூரி (Padala Kasturi) என்ற மூதாட்டி, தனக்கு சொந்தமான நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த கஸ்தூரி, தற்போது தன் குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் கோதாவரி, தனக்குச் சொந்தமாக உள்ள ஒரு ஏக்கர் நிலத்தைத் தான் ஆந்திர அரசுக்கு வழங்கி யுள்ளார். அதன் மதிப்பு 7 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, வீட்டு வசதிகள் துறையின் அமைச்சர் செருக்குவாடா ஸ்ரீரங்கநாத் ராஜுவை சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, கடந்த செவ்வாய்க் கிழமை, ஆந்திர சட்ட சபையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து நிலத்தை வழங்கி யுள்ளார்.
அந்த இடத்தில், ‘வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்’ என கோரிக்கையும் விடுத்துள்ளார். கஸ்தூரி யின் இந்தச் செயலை வெகுவாகப் பராட்டி யுள்ளார், ஆந்திர முதல்வர்.
அந்த ஒரு ஏக்கர் நிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நட்டா ராமேஷ்வரம் என்ற கிராமத்தில் உள்ளது. இறந்த தன் மகன் படலா கங்கி ரெட்டியின் நினைவாக வழங்கி யுள்ளார் கஸ்தூரி. இந்த மூதாட்டியின் செயலை அரசு மட்டுமல்லாது ஆந்திர மக்களும் பாராட்டி வருகின்றனர்.
Thanks for Your Comments