அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு கட்டண உயர்வு செய்யப் பட்டுள்ளதாக அப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, எம்.இ, எம்.டெக் படிப்புகளுக் கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயி லிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்த்தப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
அண்ணா பல்கலைக் கழகம்
சமீப காலமாக அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் நிலவி வந்தன. அதில், அரியர் மறுமதிப்பீட்டில் குளறுபடி, துணை வேந்தர் மீது பொறியியல் கல்லூரி பணியாளர்கள் குற்றச்சாட்டு, பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடு என அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் எழுந்தன.
பின்னடைவில் அண்ணா பல்கலை
இந்நிலையில், தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங் களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பின்னடைவைச் சந்தித்தன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 2019ம் ஆண்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரி களின் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலை பின்னடைவைச் சந்தித்தது.
துணை வேந்தர் மீது குற்றச்சாட்டு
இதனிடையே, அடிப்படை வசதிகளற்ற கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
அப்போது, லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மறுப்பதாக அவர் மீது அனைத்திந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் கூறப்பட்டன.
திடீரென உயர்ந்த கட்டணம்
தற்போது, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு நடைபெற்றுள்ள நிலையில் திடீரென இளநிலை படிப்புக் கான கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
ரூ.9 டூ 20 ஆயிரம் அதிகரிப்பு
தற்போது வெளியிடப்பட்டுள்ள கட்டண உயர்வு அறிவிப்பில் இளநிலை படிப்புகளுக்கு ரூ. 9 ஆயிரம் ரூபாயி லிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக் கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயி லிருந்து 17 ஆயிரத்து 500 ரூபாயாகவும், எம்.இ, எம்.டெக் படிப்புகளுக் கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயி லிருந்து 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
புதிய கட்டணத்தை அமல்
2019-20 கல்வியாண்டி லிருந்தே இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்த அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு, அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளு க்கு மட்டுமே பொருந்தும் என்றும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரி களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதான் காரணமா?
பேராசிரியர் களின் ஊதியம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக் காக, கல்விக் கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக் கழகம் கோரிக்கை விடுத்து வந்தது.
கட்டண உயர்வுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக உயர் கல்வித்துறை, அண்ணா பல்கலைக் கழகம் முன் வைத்திருந்த கட்டண உயர்வைச் சற்று குறைத்து, ஒப்புதல் அளித்துள்ளது.
Thanks for Your Comments