பூஜையின் போது லிங்கத்தின் மேல் விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் !

0
ஆந்திராவில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் பூஜையின் போது அர்ச்சகர் சிவலிங்க த்தின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 
பூஜையின் போது லிங்கத்தின் மேல் விழுந்து உயிரிழந்த அர்ச்சகர்



ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணி புரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ். 

இவர் வழக்கம் போல் நேற்று காலை கோயிலைத் திறந்து சிவ லிங்கத்திற்குப் பூஜை செய்துள்ளார். அப்போது திடீரென தடுமாறி சிவலிங்க த்தின் மீது விழுந்துள்ளார். 
பதறிப்போன சக அர்ச்சகர்கள் அவரை தூக்கி நிறுத்த முயற்சித்த போதும், மீண்டும் லிங்கத்தின் மீது விழுந்துள்ளார். இதை யடுத்து, அவரை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்ற போது அர்ச்சகர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான தால் சமூக வலை தளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings