செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

0
இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இந்த சிகிச்சை தேவைப்படுவோர் அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க வழியில்லை. 
செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

நடைமுறையில் இந்தியாவில் வருடத்துக்குச் சுமார் 3 லட்சம் பேருக்குச் சிறுநீரகம் தேவைப்படுகிறது. ஆனால், 7,500 பேருக்குத் தான் சிறுநீரகம் கிடைக்கிறது. 

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD) ஏற்பட்டு விட்டால் டயாலிஸிஸ் அவசியமா? 

இந்தச் சூழலில் அமெரிக்காவிலிருந்து செயற்கைச் சிறுநீரகம் (Bio artificial kidney) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய செய்தி வந்துள்ளது. 

செயற்கைக் கால், செயற்கைக் கண், செயற்கைக் கணையம்… இந்த வரிசையில் இப்போது செயற்கைச் சிறுநீரகம். இது நடைமுறைக்கு வருமானால் லட்சக் கணக்கான சிறுநீரக நோயாளி களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

செயற்கைச் சிறுநீரகம் எப்படி வேலை செய்கிறது?

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவிய லாளர்கள் இதைக் கண்டு பிடித்துள்ளனர். சிலிக்கான் நானோ தொழில் நுட்பத்தில் இது இயங்குகிறது. 

இதில் மின் வயர்கள், பேட்டரி என்று எதுவுமில்லை. அலைபேசி பேட்டரி அளவில் உள்ள இந்தக் கருவியைப் பயனாளியின் வயிற்றுக்குள் பதித்து, 

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பின் (CKD)அறிகுறிகள் என்ன?

ஒரு முனையை அவரது ரத்த ஓட்டத்திலும் மறுமுனையை சிறு நீர்ப்பையுடனும் இணைத்து விடுகின்றனர். ரத்த அழுத்தம் தரும் விசையில் இது இயங்குகிறது. இதில் இரு பகுதிகள் உள்ளன. 

ஹீமோஃபில்டர் எனும் ரத்த வடிகட்டி ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை முதலில் பிரித்து எடுத்து விட்டு, அதனோடு இணைந்த பயோரியாக்டர் எனும் பகுதிக்கு அதை அனுப்பி விடுகிறது. 

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

இதில் ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்பட்ட சிறுநீரக செல்கள் இருக்கின்றன. அவை அந்த ரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையான தண்ணீர், குளுக்கோஸ், சில உப்புகளை மறுபடியும் உடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றன. 

மிச்சமுள்ளதை மட்டும் சிறு நீர்ப்பைக்கு அனுப்பி சிறுநீராக வெளியேற்று கின்றன. பொதுவாக, செயற்கைச் சிறுநீரகம் போன்ற கருவிக்குள் ரத்தம் செல்லும் போது ரத்தம் உறைந்து விடும். 

ஆபத்தான நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (CKD)!

இதுவரை இது தான் இந்தக் கண்டுபிடிப்பில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இப்போது வந்துள்ள சிலிக்கான் நானோ தொழில்நுட்பம் இந்தச் சிக்கலைத் தீர்த்துள்ளது. 

செயற்கைச் சிறுநீரகம்... தெரியுமா? உங்களுக்கு !

இந்தப் புதிய கருவியில் ரத்தம் உறையவில்லை என்பது முக்கியமான திருப்பம். இதுவரை இந்தக் கருவி பொருத்தப்பட்ட அனைவரும் நலமாக உள்ளனர். 

சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?

அடுத்த ஆண்டில் இது மருத்துவச் சந்தைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. இது நிஜமானால், நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு ஆயுளை நீடிக்கும் அற்புதமான கண்டு பிடிப்பாக இது இருக்கும்.

தெரிந்து கொள்ள : 

ஒரு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைகளில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால் புரதத்தின் 'முழுமையான' மூலமாகக் கருதப்படுகிறது.

நீளமான கண்ணாடிப்பாலம்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings