ஜப்பானின் கனாஸவா (Kanazawa) நகரில் நடைபெற்ற ஏலத்தில் திராட்சைப் பழக் கொத்து பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்த ஏலத்தில் 24 திராட்சைப் பழங்களைக் கொண்ட ஒரு கொத்தை டகாஷி ஹசோக்வா (Takashi Hosokawa) என்பவர் வாங்கி யிருக்கிறார்.
இவருக்கு இஷிகாவா மாகாணத்தில் பல வெந்நீர் ஊற்று விடுதிகள் இருக்கின்றன.
இந்தப் பழங்களைப் பெறுவதற்காக அவர் 1.2 மில்லியன் ஜப்பானிய யென்களைச் செலுத்த வேண்டி யிருக்கும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 7.5 லட்சத்தைத் தொடுகிறது.
மீன் மிளகாய் மாசாலா செய்முறை !
ரூபி ரோமன் வகை திராட்சை யான இது செறிவான இனிப்புச் சுவையும் குறைவான புளிப்புச் சுவையும் கொண்டது.
எனவே, இந்த வகை திராட்சையே கடந்த 12 வருடங்களாக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப் படுகிறது. ரூபி ரோமன் வகை முதலில் இஷிகாவாவில் தான் உருவாக்கப் பட்டது.
2008-ம் ஆண்டு இவை முதன் முதலாகச் சந்தைக்கு வந்தன. அப்பொழுதி லிருந்து இன்று வரை இவற்றுக்கு வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.
இந்த வருடம் 26,000 பழங்கள் வரைக்கும் விற்பனைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால் அவை அனைத்துமே இது போல அதிகபட்ச விலைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்க முடியாது.
ஜப்பானில் பழங்களை விளைவிப்பது என்பது ஒரு கலையாகவே பார்க்கப் படுகிறது. இங்கே விளையும் சில பழ வகைகளை உலகில் வேறு எங்குமே வாங்க முடியாது.
ஜப்பானில் பல இடங்களில் நடத்தப்படும் ஏலங்களில் பழங்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப் படுகின்றன.
Thanks for Your Comments