ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்து - 35 பேர் உயிரிழப்பு !

0
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்து



ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஷ்த்வார் நோக்கி நேற்று காலையில் ஒரு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. கிஷ்த்வாரை நெருங்கிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலை பாதையில் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக் குள்ளானது. 
தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் 10 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் வெளியானது. பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. பிற்பகல் நிலவரப்படி 35 பேர் உயிரிழந் திருப்பதாக தெரிய வந்துள்ளது. 

17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலை கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங் களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 



கிஷ்த்வார் விபத்து இதயத்தை பிழியும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இவ்விபத்தில் காயமடைந்த வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்ப தாக, பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பங் களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந் தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தர விட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings