கிரையோஜெனிக் என்ஜினில் கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்கலம் ஏவுவது நிறுத்தப் பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
முதல் முறையாக நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற் காக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது.
இதை யடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தி லிருந்து ஏவுவதற்காக கவுன்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
ரூ 978 கோடியில் உருவாக்கப் பட்ட இந்த விண்கலம் மார்க் 3 என்ற ஏவுகணை மூலம் ஏவப்பட இருந்தது.
இதை காண்பதற் காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்ரீஹரிகோட்டா வுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில் திடீரென அதன் கவுன்ட்டவுன் நிறுத்தப் பட்டது.
கிரையோஜெனிக் எனப்படும் திரவு எரிபொருள் என்ஜின் கோளாறு காரணமாக சந்திராயன் 2 ஏவுகணை விண்ணில் ஏவுவது நிறுத்தப் பட்டது.
கிரையோஜெனிக் எரி பொருளானது கவுன்ட்டவுன் முடிவில் எரியத் தொடங்கியதும் ஏவுகணை அதிக உந்தும் சக்தியுடன் விண்ணில் சீறி பாய்வதற்கு உதவுகிறது.
இத்தகைய எரிபொருளை, ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நிரப்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எனவே கோளாறுகள் சரி செய்யப்பட்டு அதனை ஏவும் தேதி பின்னர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வீடியோ...
Thanks for Your Comments