சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்ட போது.. செம க்ளிக் !

0
இந்திய விண்வெளி ஆய்வில் இன்று ஒரு மைல் கல் கடக்கப் பட்டுள்ளது. சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகர மாக விண்ணில் ஏவப்பட்டது. 
சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்ட போது



இதை பார்த்த விஞ்ஞானிகள் ஒருவருக் கொருவர் கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதனிடையே, இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில், சந்திராயன்-2 தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப் பட்டு வந்தன. 
அதில் ஷேர் செய்யப்பட்ட ஒரு படம், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டி லிருந்து புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக் கப்பட்ட போது எடுக்கப் பட்டதாகும்.




இந்த ஸ்டேஜ் என்பது சந்திராயன்-2 பயணத்தில் முக்கிய மான கட்டம். எனவே இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் என்றாலும் அது மிகையான வார்த்தை கிடையாது.
புவி சுற்று வட்டப் பாதை, பூமியின் தரைப் பகுதியி லிருந்து சுமார் 170 கி.மீ உயரத்தில் இருக்க கூடிய பகுதியாகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் அங்கு சென்றடைந்த போது மதியம் 2 மணி 59 வினாடிகள் ஆகியிருந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings