இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, வருகிற 31ம் தேதி முதல் காஷ்மீரில் ராணுவக் குழுவுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடவுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் 'கூல் கேப்டன்' என்று செல்லமாக அழைக்கப் படும் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனை களுக்கு சொந்தக்காரர்.
இவர் ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாகவும் பதவி வகித்து வருகிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிற்கு பின்னர் அவர் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தோனி அதிகார பூர்வமாக ஓய்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.
ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள கிரிக்கெட் வீரர் தோனி ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்த நிலையில், ராணுவத்தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளார்.
இதை யடுத்து நேற்று முதல் அவர் ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் தனது பயிற்சியை தொடங்கி யுள்ளார். மேலும், வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவக் குழுவுடன் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Thanks for Your Comments