அட வீட்ல யாருங்க.. கொஞ்சம் பாருங்க... ஆஹா.. ஓட்டம் பிடித்த மக்கள் !

0
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையில், காசிரங்கா விலங்கியல் பூங்காவி லிருந்து தப்பிய புலி, வீடு ஒன்றில், மெத்தையில் படுத்திருந் ததை கண்டு, அதிர்ச்சி யடைந்தனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
அட வீட்ல யாருங்க.. கொஞ்சம் பாருங்க... ஆஹா



தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 21 மாவட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 800 கிராமங்கள் தனித்தீவு போல் காட்சி அளிக்கின்றன. பலரது வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக் கணக்கான ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் தண்ணீர் மூழ்கி யுள்ளன. 
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர். ஏறக்குறைய 64 லட்சம் பேர் வீடுகளையும், உடமை களையும் இழந்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். அதே நேரம், உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் ஏராளமான வன விலங்குகள் உயிரிழந் துள்ளன. 



பல விலங்குகள் வெள்ளத்தில் தப்பி, வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று, தேசிய நெடுஞ் சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் புகுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து போது, வீட்டிற்குள் புலியின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. 
சந்தேக மடைந்த வீட்டின் உரிமையாளர், வெளியில் இருந்த இடைவெளி வழியாக பார்த்த போது, மெத்தை மீது புலி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். புலி இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். இது குறித்து, தகவலறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி புலியை பூங்காவிற்கு கொண்டுச் சென்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings