உயிருக்கு ஆபத்து என்று போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த பிரமுகரின் மகள் !

1 minute read
0
"வீட்டுக்கு போக மாட்டேன்.. உயிருக்கு ஆபத்து" என்று திமுக பிரமுகரின் மகள் பாதுகாப்பு கோரி மதுரை திருப்பரங் குன்றம் ஸ்டேஷனில் காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிருக்கு ஆபத்து என்று ஸ்டேஷனில் தஞ்சமடைந்த பிரமுகரின் மகள்



சென்னை பூந்தமல்லி ஸ்ரீ வித்திய கணபதி தெருவை சேர்ந்தவர் நிதர்சனா. நிதர்சனாவின் அம்மா காயத்ரி ஸ்ரீராம், 2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டி யிட்டவர்.

தற்போது சென்னை திருவள்ளுவர் தெற்கு தொகுதி துணை மாவட்ட செயலாள ராகவும் உள்ளார். இந்நிலையில், நிதர்சனா, சேஷா நகரை சேர்ந்த மைக் ரிச்சர்ட்சன் என்பவரை காதலித் துள்ளார்.

ஆனால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்திருக் கிறது. அதனால் இவர்கள் இருவரும் நேற்று திருப்பரங் குன்றம் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். 
மேலும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கோரி திருப்பரங் குன்றம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இதனிடையே நிதர்சனாவை காணவில்லை என்று, பூந்தமல்லி ஸ்டேஷனில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

அதனால் பூந்தமல்லி போலீசார், மதுரை திருப்பரங் குன்றம் அனைத்து மகளிர் ஸ்டேஷனு க்கு நிதர்சனாவை அழைத்து செல்ல வந்திருக்கி றார்கள். ஆனால் தம்பதியோ, சென்னைக்கு போனால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும், அவர்களுடன் செல்ல மாட்டேன் என்றும் சொல்லி உள்ளனர். 




இப்போதைக்கு இந்த வழக்கு, திருப்பரங் குன்றம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் இருந்து, திருப்பரங் குன்றம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, விசாரணை யும் நடந்து வருகிறது.
வீட்டில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக நிதர்சனா குற்றஞ்சாட்டி யிருப்பதும், தொடர்ந்து உயிருக்கு ஆபத்து இருப்பதால் பெற்றோருடன் செல்ல மறுப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 27, March 2025
Privacy and cookie settings