குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை - மறுபரிசீலனை !

0
குல்பூஷண் ஜாதவ் வழக்கில், மரண தண்டனையை பாக். ராணுவம் நிறைவேற்ற முடியாது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கி யுள்ளது. 
குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை




இந்திய கடற்படையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற குல்பூஷண் யாதவ், 49, 2016-ம் ஆண்டு ஈரான் சென்றிருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப் பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், 2017ல் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. 2017- மே மாதம் மரண தண்டனைக்கு தடை விதித்தது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜூலை 17-ல் தீர்ப்பு வெளியிட முடிவு செய்திருந்தது.

தீர்ப்பில் கூறப்பட் டுள்ளதாவது: 

குல்பூஷண் ஜாதவை பாக். ராணுவம் தூக்கிலிட முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை பாக். ராணுவம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா சார்பில் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம். உறவினர் களையும் பார்க்கலாம் என்று கூறிஉள்ளது.




இந்த வழக்கு தொடர்பாக தெற்காசிய சர்வதேச சட்ட ஆலோசகர் ரீமா ஓமர் தன் ட்வீட்களில் கூறியிருப்ப தாவது:

சாதக பாதகங்களை ஆராய்ந்து சர்வதேச நீதிமன்றம் இந்தியாவு க்குச் சாதகமாக தீர்ப்பளித் துள்ளது. தூதரக அதிகாரிகள் ஜாதவ்வை சந்திக்க பாகிஸ்தான் மறுத்திருக்கக் கூடாது.

ஜாதவ்வுக்கு அளித்த மரண தண்டனையை பயனுள்ள வகையில் பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் பயனுள்ள வகையில் அவரது மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யும் வரை ஜாதவ்வின் மரண தண்டனை ரத்து செய்யப் படுகிறது. காரணம் ஜாதவ்வுக்கு பாகிஸ்தான் தூதரக அணுக்கத்தை மறுத்திருக்கக் கூடாது, இதன் மூலம் பாகிஸ்தான், 36(1) சட்டப் பிரிவை மீறியுள்ளது.

ஆனாலும் இந்தியா இது குறித்து கோரியிருந்த பல்வேறு தீர்வுகளை சர்வதேச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதில் ராணுவ கோர்ட் தீர்ப்பை ரத்து செய்வதும் அடங்கும். அவரை விடுதலை செய்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் இப்போதை க்கு சர்வதேச நீதிமன்றம் நிராகரித் துள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐசிஜே நீதிபதி அப்துல் குவாவி அகமெட் யூசுப், குல்பூஷண் யாதவ் ஒரு இந்தியக் குடிமகன், ஜாதவ்வின் இந்திய குடியுரிமை பற்றி எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய விண்ணப்பத்தை பாகிஸ்தான் நிராகரிக்கக் கோரியது இதனால் செல்லு படியாகாது.




அதே போல் ஜாதவ் என்ற உண்மை யான பெயர் அல்லாமல் வேறு பெயருடன் அவர் இருந்தார் என்பதை இந்தியா ஏன் விசாரிக்க வில்லை ஆகவே இந்திய கோரிக்கையை நிராகரிக்க வேண்டு மென்ற பாகிஸ்தான் கோரிக்கை யையும் நீதிபதி நிராகரித்தார்.

“கைது செய்யப்பட்ட நபரை சந்திக்கவும், அவருக்கு தேவையான சட்ட உதவியை அளிக்கவும் இந்தியக் குடியரசுக்கு உரிமை உள்ளது, பாகிஸ்தான் இதனை மறுத்ததன் மூலம் வியன்னா உடன் படிக்கையை மீறி விட்டது.

மரண தண்டனை ரத்தை நீட்டிப்பதன் மூலம் குல்பூஷனுக்கு அளித்த தண்டனை மற்றும் அவர் மீதான குற்றச் சாட்டுகளை பாகிஸ்தான் பயனுள்ள வகையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்ற நீதிபதி அப்துல் குவாவி அகமெட் யூசுப்பின் தீர்ப்பை மற்ற 15 நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings