நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது.
மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கனமழையால் நேற்று வரை 28 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை யடுத்து, நேபாளத்தில் கனமழை காரணமாக எற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
Thanks for Your Comments