மதுரை அருகே மேலூரில் குடிநீர் குழாய் உடைந்து போனதால் பல்லாயிரக் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த பைப் பழுதை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று மக்கள் வேதனை வெளியிட் டுள்ளனர்.
ஊரெல்லாம் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டுப் பாடிக் கொண்டிரு க்கும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாவது மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி நான்கு வழிச் சாலையோரம் தும்பைப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் செல்கின்றன.
இக்குழாயில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து பல்லாயிரக் கணக்கான லிட்டர் தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி அருகில் உள்ள வயல் வெளிப்பகுதி யில் பாய்ந்து வருகின்றது.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து கோர தாண்டவம் ஆடிவரும் சூழ்நிலையி லும், தண்ணீருக் காக மேலூர் பகுதிகளில் சாலை மறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இங்கு தண்ணீர் வீணாகி மேலும் பஞ்சத்தை ஏற்படுத்துவ தாகவும் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Thanks for Your Comments