உத்தர பிரதேசத்தில் வீடுகளற்று சாலையில் சுற்றித் திரிவோர் மற்றும் யாசகம் கேட்பவர்களை கண்டறிந்து, வேலைகள் வழங்க லக்னோ மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதை யடுத்து சாலைகளில் யாசகம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி லக்னோ மாநகராட்சி யில் சாலைகளில் யாசகம் கேட்பவர்களை ஒட்டு மொத்தமாக கணக்கெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களுக் குரிய வேலைகள் வழங்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
குறிப்பாக லக்னோ மாநகராட்சி உள்ள வீடுகளில்,வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்த உள்ளதாக லக்னோ மாநகராட்சி ஆணையர் இந்திராமணி திரிபாதி கூறி யுள்ளார்.
Thanks for Your Comments