காதலித்தவரின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காதலியின் தந்தையை காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித் துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதியரின் மகன் பெரியசாமி என்பவர், அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி மகள் பவுலியா என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் கொளஞ்சி தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்திருந்த நிலையில், காதலர்கள் இருவரும் சில வாரங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டனர். இதனால் இரு குடும்பத்தி னரிடையே பிரச்னை இருந்து வந்தது.
இது குறித்து கொளஞ்சி, பெரிய சாமியின் தாய் செல்வியிடம் சென்று, தனது மகளை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார். இருப்பினும் அவர்களை செல்வியால் அழைத்து வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திர மடைந்த கொளஞ்சி இரு தினங்களுக்கு முன், ஊரின் சாலை யோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து செல்வியை, கொளஞ்சியை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்து தாக்கிய தாகவும்,
இதைக் கண்ட கிராம மக்கள் விருத்தாசலம் போலீஸாரு க்குத் தகவல் அளித்த நிலையில், போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, செல்வி மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித் துள்ளனர்.
இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில், பெண்ணின் தந்தை கொளஞ்சியை கைது செய்த போலீஸார், அவரை நிலைய ஜாமீனிலேயே விடுவித்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீதை தொடர்பு கொண்ட போது, அதுகுறித்து பேச மறுத்து விட்டார்.
பின்னர் வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கலிய மூர்த்தியிடம் பேசியபோது, சம்பவம் தொடர்பாக வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் ஒரே சமூகத்தினர். ஆத்திரத்தில் தவறு நடந்து விட்டதாக கொளஞ்சி கூறினார்.
எனவே அவரது வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவித்தோம். தலைமறை வாக இருந்த ஜோடியான செல்வி - பெரியசாமி குடும்பத்தி னரோடு இணைந்து விட்டதால், இரு குடும்பத்தினரும் சமாதானமாகி சென்று விட்டனர்.
Thanks for Your Comments