ராத்திரியில் ஜாலியாக இருக்க முடிய வில்லையே என்பதற்காக 4 வயது குழந்தையை கல்லாலேயே அடித்து கொன்ற கொடூரம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. இது சம்பந்தமாக பெற்ற தாய் உட்பட 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கீதா. கீதாவுக்கு 23 வயசாகிறது. இவர்களது 4 வயது மகன் ஹரிஷ். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2 வருஷத்துக்கு முன்னாடியே தம்பதி பிரிந்து விட்டனர்.
பின்னர் முருகன் வேறொரு கல்யாணம் செய்து கொண்டார். கீதாவும் உதயகுமார் என்பவரை 2-வதாக கல்யாணம் செய்து கொண்டார். ஒரு வயதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
எரிச்சல்
இதனால் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையான ஹரீஷை தனது பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் கீதா தனது கணவர் உதய குமாருடன் அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே குடியேறினார்.
இதனால் ஹரீஷ் அடிக்கடி அம்மா கீதாவிடம் வர ஆரம்பித் துள்ளான். ராத்திரி நேரத்திலும் வந்து தூங்க ஆரம்பித் துள்ளதால், கீதாவுக்கும், உதய குமாருக்கும் எரிச்சல் வந்திருக்கிறது.
உல்லாசம்
இதனிடையே கீதாவின் தங்கை புவனேஸ்வரி யும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால், கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதே போல புவனேஸ்வரியும், உதய குமாரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனை ஹரிஷ் பார்த்து விட்டான். இவர்கள் அனைவரின் உல்லாசத்து க்கும் ஹரீஷ் இடைஞ்சலாக இருப்பதாக எண்ணினார்கள். அதனால் அவனுக்கு சரியாக சாப்பாடு தராமல் இருந்திருக் கிறார்கள்.
கொல்ல முடிவு
ராத்திரி நேரம் என்றும் பார்க்காமல், ஹரீஷை வெளியில் அனுப்பி கதவை அடைத்து விடுவதையும் வழக்கமாக கொண்டிருந் தனராம். ஒரே ஒரு அறையை மட்டுமே கொண்ட கீதாவின் வீட்டில், ஹரீஷ் இருக்கும் வரை உல்லாசமாக இருக்க முடியாது என்று உதய குமாரும் கீதாவும் முடிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கீதாவின் சகோதரி யான புவனேஸ்வரி மற்றும் அவரது கணவர் கார்த்திக்குமார் ஆகியோர் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர்.
கொலை
இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. கார்த்திக் குமார் மற்றும் புவனேஸ்வரி யிடம் ஹரீஷ் தங்களுக்கு மிகவும் இடைஞ்ச லாக இருக்கிறான் என்று உதய குமாரும் கீதாவும் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் தான் இதனை யடுத்து ஹரீஷை கொலை செய்து செய்வது என்று 4 பேரும் முடிவு செய்தனர்.
முகத்தை சிதைத்தனர்
அதனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து ஹரீஷை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு கோம்பை கால்நடை ஆஸ்பத்திரிக்கு எதிராக உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அந்தப் பகுதிக்கு சென்றவுடன் கார்த்திக் குமார் கம்பியால் ஹரீஷின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. அதன் பின்னர் புவனேஸ்வரி அந்த சிறுவனின் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார். கீதாவின் இரண்டாவது கணவர் உதயகுமார் அங்கிருந்த செங்கலால் சிறுவனின் முகத்தை அடித்து சிதைத் துள்ளார்.
கழுத்தை அறுத்தனர்
"என் கண்முன்னே என் மகனை கழுத்தை அறுக்காதீர்கள், நான் கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறேன்" என்று சொல்லி கீதா ஆள் நடமாட்டம் எதுவும் உள்ளதா என்று கண்காணித்து கொண்டிருந் திருக்கிறார்.
கொலை செய்து முடித்ததும் புவனேஸ்வரி யும் கார்த்திக்கும் தங்களது ஆட்டோவில் கம்பத்திற்கு சென்று விட்டனர் உதய குமாரும் கீதாவும் ஒன்றும் தெரியாதது போல் அவர்களது வீட்டிற்கு வந்து விட்டனர்.
போலீசில் புகார்
ராத்திரி 9 மணிக்கு மேல் தான் குழந்தையை காணோம் என்று கீதாவின் பெற்றோர், தங்கை தேடி உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கீதாவும் மகனை தேடி உள்ளார்.
போலீசில் மகனை காணோம் என்று புகார் அளித்ததே கீதா தான். மறுநாள் காலை அந்த பகுதிக்கு சென்றவர்கள் ஹரீஷ் இறந்து கிடந்ததை பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
4 பேர் கைது
உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு எதுவுமே உடனே பிடிபட வில்லை. இதை யடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தான், சிறுவனை இவர்கள் அழைத்து கொண்டு ஆட்டோவில் சென்றதை கண்டு அதிர்ந்து போனார்கள்.
இதை யடுத்து 4 பேரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய பிறகு, குழந்தையை அடித்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனை யடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments