கேரள மாநிலம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிர மடைந்து வருகிறது. நான்கு மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே, மழையால் கோட்டயம் கலெக்டருக்கு வித்தியாச மான சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.
தொடர் மழை காரணமாக, கோட்டயத்தின் சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று இரவு 9 மணி அளவில் விடுமுறை அறிவித்தார், கலெக்டர் சுதீர்பாபு. இந்த அறிவிப்பை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு வெளியான அடுத்த சில நிமிடங்க ளிலேயே விடுமுறை விடாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் அந்த ஃபேஸ்புக் பக்கத்தை முற்றுகை யிடத் தொடங்கினர்.
இதற்கடுத்து நடந்தது எல்லாம் காமெடி ரகம். தங்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என ஒவ்வொரு வரும் கமென்ட்டு களைப் பதிவிட்டனர்.
அதில் ஒருவர், நாளை (இன்று) மிகவும் எதிர் பார்க்கப்பட்ட சந்திரயான்-2 லாஞ்ச் இருக்கிறது.
இந்தக் கடுமையான மழையில் பள்ளிக்குச் சென்று, பிறகு கிளாஸை கட் அடித்து விட்டு வந்து டிவி-யில் சந்திரயான்-2 லாஞ்ச்சை பார்ப்பது எல்லாம் முடியாத காரியம்.
அதனால், மாவட்டம் முழுவதும் விடுமுறை வேண்டும் எனக் கூறி அட்ராசிட்டி செய்துள்ளார்.
இதே போல் ஒரு சிறுவன், சார் நீங்கள் விடுமுறை விடாவிட்டால், மற்ற சாதாரண தினத்தைப் போல இந்த தினமும் கடந்து போகும்.
மாறாக நீங்கள் விடுமுறை அறிவித்து விட்டால், என்னைப் போல் இம்போசிஷன் எழுதாத மாணவர்கள் எல்லாம் அதை எழுதி விடுவோம்.
அதுமட்டு மில்லாமல், குளத்தில் குதித்து விளையாடு வோம். இதுவரை குதிக்காத குழந்தை களுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்கும்.
இது, எதிர்கால தலைமுறையை மேம்படுத்தும் மற்றும் நாடும் வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளான்.
இப்படி பலரும் பல விதமாக கமென்ட்டு களைத் தட்டிவிட, கலெக்டரின் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே 3000 லைக்ஸ், 2700 கமென்ட், 200 ஷேர் கிடைத்து தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Thanks for Your Comments