சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் செல்லும் அரசு பேருந்துகள், ஒரு சில குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே நிறுத்தப் படும். அந்த உணவகங்கள், பயணிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்ப தாகப் பல புகார்களைக் கேட்டிருப்போம், செய்திகளில் வாசித்திருப்போம்.
அப்படியான நிலை நமக்கும் நேர்ந்த அனுபவம்தான் இந்தச் செய்தி. வேலை நிமித்தமாக சென்னை யிலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பேருந்து, திண்டிவனம் அருகே உள்ள பாலப்பட்டு வந்ததும் அங்குள்ள தனியார் உணவகத்தில் நிறுத்தப் பட்டது.
வழக்கமாக இங்கு தான் அனைத்து அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்படும். அந்த உணவகத்தில், பயணிகளுக்கு ஏற்பட்ட சில தர்ம சங்கடமான நிலையை நம்மால் காண நேர்ந்தது.
தனியார் உணவகத்தில் அரசுப் பேருந்து நின்றதும், அதில் இருந்து இறங்கிய பயணிகள் உணவகத்திற் குள் சென்றதும் தங்களுக்கு விருப்பமான உணவுப் பொருள்களை ஆர்டர் செய்தனர்.
அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளோடு அவர்களின் விருப்பத்தை கேட்காமலே அங்கு பணிபுரியும் ஊழியர்கள், சில உணவுப் பதார்த்தங் களைக் கூடுதலாக வழங்குகி றார்கள். நாம் அப்படிப்பட்ட சம்பவத்தை நேரடியாகவே கண்டோம்.
பக்கத்து டேபிளில் அமர்ந்த பயணி ஒருவர், ஒரே ஒரு தோசை மட்டும் ஆர்டர் செய்கிறார். ஆனால், அங்கே பணிபுரியக் கூடிய ஊழியர், "ஒரு தோசை யெல்லாம் கிடையாதுங்க, வேணும்னா ரெண்டு தோசையா வாங்கிக் கோங்க" என்று கட்டாயப் படுத்துகிறார்.
அந்தப் பயணியும் வேறு வழியில்லாமல், ஊழியரின் விருப்பப்படியே வாங்கிக் கொள்கிறார். அதோடு மட்டு மல்லாமல், உணவருந்த வரக்கூடிய எல்லா பயணிகளு க்கும், அவர்களின் விருப்பத்தைக் கேட்காமலே, என்ன குழம்பு எனத் தீர்மானிக்கவே முடியாத வகையில் ஒரு குழம்பும் கூடுதலாக வழங்கப் பட்டது.
சாப்பிட்டு முடித்தவர் களிடம், இரண்டு தோசை மற்றும் அந்த குழம்புக்கு 120 ரூபாய் கணக்கு கூறுகிறார்கள். உணவருந்திய ஒரு பயணி, "என்ன சார் இது அநியாயமா இருக்கு...
ரெண்டு தோசைக்கும் இந்த குழம்புக்கும் 120 ரூபாய் கேக்குறீங்கன்னு" குரலை உயர்த்தவும், அந்தப் பயணியிடம் மட்டும் "சரி 90 ரூபாய் கொடுத்துட்டு சத்தம் போடாம போங்க சார்னு" சொல்லி அனுப்பிட்டார்.
அவர் மட்டுமல்ல, அங்கே வரக்கூடிய அனைத்துப் பயணிகளும், உணவக ஊழியர்கள் விருப்பத்திற் கேற்ற உணவை சாப்பிட்டு விட்டு, அவர்கள் என்ன விலை கூறுகிறார்களோ அதனை வேறு வழியின்றி கொடுத்து விட்டு பேருந்தில் ஏறிக்கொள் கின்றனர்.
அங்கே நின்ற ஓர் அரசுப் பேருந்து நடத்துநரிடம் இது குறித்து விசாரித்தோம்... 'அநியாயமான முறையில் தகுதியற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் இது மாதிரியான உணவகங்களில் ஏன் நீங்கள் பேருந்தை நிறுத்துகிறீர்கள்?' என நடத்துநரிடம் கேட்டதும் அவர் பேசத் தொடங்கினார்.
சார் உங்களுக்கு இருக்கக் கூடிய கோபமும் வருத்தமும் எனக்கும் இருக்கு. இப்ப நான் சாப்பிட்ட உணவு கூட எப்ப ரெடி பண்ணதுனு தெரியல, வேற வழியே இல்லாம தான் சாப்பிட்டு வந்தேன்.
நீங்க கேக்கிற மாதிரி நிறைய பயணிகள் கேட்டு இருக்காங்க. இந்த ஹோட்டலுக்கு நாங்களா விருப்பப்பட்டு நிறுத்தல சார். பாலப்பட்டுல இருக்கிற இந்த ஹோட்டலயும் விக்கிர வாண்டில இருக்கக் கூடிய இன்னொரு ஹோட்டல்லயும் மேல் அதிகாரிங்க தான் நிறுத்தச் சொல்றாங்க.
ஒரு வேளை நாங்க இந்த ஹோட்டல்ல நிறுத்தாம வேற நல்ல ஹோட்டல்ல நிறுத்தினா, எங்களை மூணு நாள் சஸ்பெண்டு செஞ்சிடு வாங்க சார். ரெண்டு ஹோட்டல்லயும் வண்டி நம்பரச் சொல்லி சீல் வாங்கி அதிகாரிங்க கிட்ட கொடுக்கணும்.
ஒரு பேருந்துக்கு இவ்ளோ கமிஷன்னு அந்த ஹோட்டல் காரங்ககிட்ட அதிகாரிங்க வாங்கிப்பாங்க. நாங்க பஸ் நம்பரச் சொல்லாம, சீல் வாங்காம வந்துட்டா, அதுக்கே திட்ட ஆரம்பிச் சிடுவாங்க அதிகாரிங்க.
வேற வழியும் எங்களுக்கு இல்ல" என அவருடைய கோபத்தையும் வருத்தத்தையும் நம்மிடம் வெளிப் படுத்தினார். தனியார் ஆம்னி பஸ்களின் `கட்டணக் கொள்ளை' தாங்க முடியாமல் தான் ஏழை எளிய மக்கள் அரசுப் பேருந்தை நாடுகின்றனர்.
அப்படி வரும் மக்களையும் இது மாதிரியான உணவகங்களில் நிறுத்தி கஷ்டப்படுத்து கிறார்கள். பணம் போனாலும் பரவாயில்லை என்று சாப்பிட்டாலும், அந்த உணவகத்தில் சுத்தமாகவோ தரமாகவோ உணவுகள் வழங்கப் படுவதில்லை.
ஒரு அரசாங்கம், பொது மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, இது மாதிரியாக கமிஷன் களை உணவக உரிமை யாளர்களிடம் பெற்றுக் கொண்டு, மக்களை நிர்பந்தத்தில் தள்ளுகிறார்கள்.
இது குறித்து மேல் அதிகாரிகளிடம் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து விடுகிறார்கள். பேருந்துகளில் பயணிக்கக் கூடிய ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான உணவகங்களில் உண்ண வேண்டிய விருப்பம் இருக்கலாம்.
ஆனால், அது நடை முறையில் சாத்தியமும் இல்லை என்பதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அந்த காரணத்தை தங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக பணம் சம்பாதிப்பதை எப்படி ஏற்க முடியும்?
ஒரு பேருந்துக்கு இவ்ளோ கமிஷன்னு அந்த ஹோட்டல் காரங்க கிட்ட அதிகாரிங்க வாங்கிப்பாங்க. நாங்க பஸ் நம்பர சொல்லாம, சீல் வாங்காம வந்துட்டா, அதுக்கே திட்ட ஆரம்பிச் சிடுவாங்க அதிகாரிங்க.
இனி வரும் காலங்களில், இது மாதிரியான மக்களின் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அதன்மூலம் பணம் சாம்பாதிக்க நினைக்கும் உணவகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
மக்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மனிதாபி மானத்தோடு விலையை நிர்ணயித்து, தரமான உணவுகளை வழங்கக்கூடிய உணவகங் களுக்கு வழங்கலாம்.
அல்லது அரசாங்கமே உணவகங் களைத் திறந்து, மக்களுக்குத் தேவையான உணவுகளை விற்பனை செய்யலாம் என்பதே பலருடைய விருப்பம்.
Thanks for Your Comments