மேற்கு மகாராஷ்டிரா வின் சதாரா மாவட்டத்தில் உள்ள குல்பூஷண் ஜாதவ்வின் கிராமத்தில் மக்கள் இன்று சர்வதேச நீதிமன்ற சாதகத் தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை உள்ளிட்ட குற்றச் சாட்டுகளை மறு பரிசீலனை செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தர விட்டதை யடுத்து சதாரா மாவட்டத்தில் உள்ள ஜாவ்லி தாலுகாவைச் சேர்ந்த கிராமத்தில் மக்கள் தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்தவர் கூறும்போது, “ஜாவ்லியில் பண்ணை வீடு ஒன்றை ஜாதவ் கட்டியுள்ளார். ஆண்டொன்றுக்கு 2-3 முறை அந்த வீட்டை வந்து ஜாதவ் பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்திய அரசு என்ன ஆனாலும் அவர் விடுதலையா வதை உறுதி செய்ய வேண்டும். இது அவர்கள் பொறுப்பு. பாகிஸ்தானு க்கு நெருக்கடி அளித்து குல்பூஷண் யாதவ்வை விடுவிக்க வேண்டும்” என்றார்.
மும்பையின் ஓய்வு பெற்ற அசிஸ்டெண்ட் கமிஷனர் சுதிர் ஜாதவ்வின் மகன் தான் குல்பூஷண் ஜாதவ், இவரது மாமா சுபாஷ் ஜாதவ்வும் போலீஸ் துறையில் ஏசிபியாக பணிஓய்வு பெற்றவர்.
அவர் கூறும் போது, “இந்தத் தீர்ப்புக்காக ஆவலுடன் காத்திருந்தோம், அவர் இந்தியா திரும்புவதை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்” என்றார்.
தெற்கு மும்பை பரேல் பகுதியில் குல்பூஷண் யாதவ் சில ஆண்டுகள் வாழ்ந்ததால் அங்கு அவர்களின் நண்பர்கள், உறவினர்கல் உதடுகளில் வேண்டு தலுடனும், பிரார்த்தனை யுடனும் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை லைவாக பார்த்துக் கொண்டிருந்தனர். தீர்ப்பு வெளியான வுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Thanks for Your Comments