செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள் என தருமபுரி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி எம்பியான செந்தில் குமார், சமூக அக்கறையின் காரணமாக ஏராளமான நன்மைகளை செய்து வருகிறார்.
பார்லி மென்ட்டுக்கு போனோமா வந்தோமா என இல்லாமல் நிறைய விஷயங்களை வெளிக் கொண்டு வருகிறார்.
அண்மையில் கூட டெல்லியில் பள்ளிகளில் கட்டப் பட்டுள்ள நவீன டாய்லெட்டு களை நேரில் சென்று பார்வை யிட்டார். இந்த நிலையில் செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் ஒரு மாணவிக்கு உதவி செய்யுங்கள் என கோரி யுள்ளார்.
நன்றி
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சதுரங்கத்தின் மீது பேரார்வம் கொண்ட கோயமுத்தூரை சேர்ந்த பிரியங்கா விற்கு நிதியுதவி தேவைப் படுகின்றது.
ஒரு கிராண்ட் மாஸ்டராக அவர் உருவாக வேண்டும் என்ற அவருடைய கனவு மெய்ப்பட 6 லட்சம் ரூபாய் தேவைப் படுகின்றது. இதனை அறியச்செய்த @Manikandanraj92 அவர்களுக்கு நன்றி.
முகவரி
திட்டம் என்ன வென்றால் அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் 300 ஆதரவாளர்கள் 2000 ரூபாய்க்கு உதவி செய்பவர்களை கண்டறிவது தான்.
இது பற்றிய ஆர்வம் இருந்தால் எனக்கு #sponsor_priyanka_chess என்ற ஹேஷ்டேக் குடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு டுவீட் செய்யுங்கள்.
ஆதரவு
அந்த வங்கிக் கணக்கை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கின்றேன். ஒருமுறை பணத்தை செலுத்திய வுடன் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனக்கு அனுப்பி ஆதரவாளர் என்பதை உறுதி செய்யுங்கள்.
1-ல் இருந்து 300 நபர்கள் தொடர்ச்சி யாக ஆதரவாளர் களை டேக் செய்வோம். ஒரு தனிநபர் Rs.2000 வரை ஆதரவளிக்கலாம் அதற்கு மேல் அல்ல.
டுவிட்டரில்
இதனால் பலரும் உதவி செய்ய ஏதுவாக இருக்கும். என்னுடைய ஆதரவாக ரூபாய் 2000. ஆகவே #sponsor_priyanka_chess 1)Senthil @Drsenthil_MDRD. தொடர் செயல்பாடு களை தொடருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Priyanka from Coimbatore an emerging young kid with passion for chess would be requiring financial support ., Amonut required is around 6 lakhs to support her to maker her dreams of becoming a Grandmaster into reality. Thank you @Manikandanraj92 for bringing to notice.1/3 pic.twitter.com/Jsbld2jmBd— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) July 20, 2019
உதவி செய்வோருக்கு வசதியாக அந்த மாணவியின் வங்கிக் கணக்கையும் தனது டுவிட்டரில் குறிப்பிட் டுள்ளார்.
Thanks for Your Comments