பணத்தை மட்டுமில்லை.. புருஷனையும் சேர்த்து காணோம்.. வேறொரு பெண்ணுடன் ஓடிவிட்ட தன் கணவரை எப்படி யாவது மீட்டு தாருங்கள் என்று பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரை அடுத்த ராக்கியா பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி அன்னபூரணி - செந்தில்குமார் தம்பி. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 23 வருஷம் ஆகிறது. சில தினங்களு க்கு முன்பு, செந்தில்குமார் புதிதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று மனைவியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி அன்ன பூரணியும், சுய உதவி குழுக்கள், தனியார் நிதி நிறுவனம், ஆகியோரிடம் இருந்து கடன் வாங்கி தனது கணவர் செந்திலிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
அன்னபூரணி
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீனாகுமாரி என்ற பெண்ணுடன் போனவாரம் எஸ்.ஆகி உள்ளார் செந்தில்குமார். புருஷனை காணாமல் அன்னபூரணி தேடிவந்த நிலையில், விஷயம் ஊருக்குள் தெரிந்து மற்றொருபுறம் கடன் கொடுத்தவர்கள், அன்ன பூரணியை ரவுண்டு கட்டி விட்டார்கள்.
நடவடிக்கை
வாங்கிய கடனை கேட்டு அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அன்னபூரணி திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார். ஆனால் இந்த புகாரின்மீது நடவடிக்கை விரைந்து எடுக்கவில்லை என தெரிகிறது. திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் அளிக்கும்படி சொல்லி உள்ளார்கள்.
மனம் நொந்தார்
அதனால் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்னபூரணி வந்து புகார் தந்தார். ஆனால் போலீசார், திருமுருகன் பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் அளிக்கும்படி சொன்னார்கள்.
இப்படியே ஸ்டேஷன், ஸ்டேஷனாக அலைக் கழிக்கப் பட்டுள்ளதால் மனம் நொந்து போனார் அன்னபூரணி.
தர்ணா
ஏற்கனவே புருஷனை காணோம், பணத்தையும் காணோம், இப்போது புகாரும் எடுக்க வில்லையே என்று நொந்து போன அன்னபூரணி, கணவரை உடனடியாக மீட்டுத் தரும்படி கூறி, திருப்பூர் வடக்கு ஸ்டேஷன் வாசலிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடவடிக்கை
இதை யடுத்து போலீஸார் திருமுருகன் பூண்டி போலீசாரு க்கு தொடர்பு கொண்டு பேசினர். புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வும் சொன்னார்கள். இதை யடுத்து, தர்ணாவை அன்னபூரணி, போராட்டத்தை கைவிட்டார்.
Thanks for Your Comments