ஹைட்ரோ கார்பன் மேலும் 4 இடங்களில் ஒப்பந்தம் - தமிழக நிலை !

0
தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, டெல்லியில் கையெழுத்தாகி உள்ளது. டெல்லியில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் துறை அதிகாரிகள் - ஓ.என்.ஜி.சி இடையே இரண்டு ஒப்பந்தம் கையெழுத் தானது. 
ஹைட்ரோ கார்பன் மேலும் 4 இடங்களில் ஒப்பந்தம்



அதே போல், மற்ற 2 ஒப்பந்தங்கள் ஐ ஓ சி நிறுவனத்துடன் கையெழுத்தானது. நாகை மாதானம், கடலூர் புவனகிரி, தஞ்சை பந்தநல்லூர், திருவாரூர் நன்னிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.

புவனகிரியி லும் நன்னிலத்திலும் 2 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப் படுகிறது. மற்ற இரண்டு இடங்களில் 3 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற் காக திறந்த வெளி அனுமதிக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

ஹைட்ரோ கார்பன் வளங்களை, ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இக்கொள்கை யின் நோக்கமாகும். அதன்படி முதல்கட்ட ஏலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. 

அந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் எண்ணெய் வளம் மிக்க 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றன. 
தமிழக நிலை



ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது. 

இதில் இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 474 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற் கான அனுமதியை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.

மூன்றாம் கட்டத்தில் நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 16 கிணறு களுக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 
மேலும், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1863 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவில் 16 கிணறு களுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, பெட்ரோலிய துறை அனுமதி வழங்கி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings