இனி துபாயில் இந்திய ரூபாய் செல்லும் - நிம்மதியான தகவல் !

0
துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங் களிலும் உள்ள டூட்டி ஃப்ரீ வர்த்தக நிலையங் களில் இந்திய ரூபாய் செல்லும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. துபாய்க்கு அதிக எண்ணிக்கை யில் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள், இந்தத் தகவலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இனி துபாயில் இந்திய ரூபாய் செல்லும்



துபாய் டூட்டி ஃப்ரீயில் இந்திய ரூபாயிலேயே அனைத்து பொருட்களை யும் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. துபாயை பொருத்த வரையில் ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக் கான இந்தியர்கள் வேலைக்கும், சுற்றுலா விற்கும் சென்று வருகின்றனர். 
மிகச் சிறந்த வெளிநாட்டு சுற்றுலாத் தளமாக துபாய் விளங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு செல்லும் இந்தியர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்ன வென்றால் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படும் அமெரிக்க டாலர்களாகள், பவுண்ட்ஸ், யூரோ, திர்ஹம் ஆகியவை மட்டுமே அங்கு ஏற்றுக் கொள்ளப்படும். 

இந்தியர்கள் ரூபாயை டாலராக மாற்றியே அங்கு செலவழிக்க முடியும். ஆனால், இனி அப்படி இல்லை. இனிமேல் துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 3 பிரிவுகளிலும், அல் மக்தும் விமான நிலையத்தி லும் உள்ள டூட்டி ஃப்ரீ வர்த்தக மையங்களில் இந்திய ரூபாயைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கலாம்.

இது தொடர்பாக துபாய் ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்ட தாவது, ”துபாய் பன்னாட்டு விமான நிலையத்திலும், அல் மக்தோயம் விமான நிலையத் திலும் உள்ள கடைகளில் இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லு படியாகும். துபாயில் இனி இந்திய ரூபாய்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொதுவாகவே, இந்தியர்கள் நம் நாட்டு பணத்தை திர்ஹாமாக மாற்றுவதற்கு கணிசமான தொகையை செலவழிக்க வேண்டும். துபாய் விமான நிலையத்திற்கு கடந்தாண்டு மட்டும் 9 கோடி பயணிகள் சென்றுள்ளனர். அவர்களில் 1.2 கோடி பேர் இந்தியர்கள்.



துபாயில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 16 ஆவது பணம் இந்திய ரூபாய் ஆகும். ரூபாயை திர்ஹாமாக மாற்றுவதற்கு வசூலிக்கப்படும் வரிகள் மூலம் துபாய்க்கு இந்திய பயணிகளால் அதிக வருவாய் கிடைத்து வந்ததும் கவனிக்க வேண்டிய ஒன்று. 
துபாயில் பணி புரிவர்களில் அதிக எண்ணி க்கையில் இருப்பவர்களில் இரண்டாவது இடம் வகிப்பது இந்தியர்கள் தான். கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, துபாய் டூட்டி ஃப்ரீயில் பரிவர்த்தனை யில் ஏற்கப்பட்ட 16-வது கரன்சி இந்திய ரூபாயாகும். 

துபாய் டூட்டி ஃப்ரீயில் தற்போது 47 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings