சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை 2020 -ஆம் ஆண்டின் முதல் பாதியில் அனுப்ப திட்டமிடப் பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் கூறினார்.
அவரது பேட்டியில் மேலும், ‘நிலவின் தென் துருவத்தில் ரோவர் வாகனம் இறங்கினால் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும்.
உலக நாடுகளின் யாருடைய விண்கலமும் செல்லாத இடத்திற்கு சந்திரயான் - 2 செல்ல வுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் சந்திரயான் - 2 விண் கலத்தில் இருந்து தகவல்கள் கிடைக்கும்’ என்றார் அவர்.
Thanks for Your Comments