இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியா செராரோ, 2019-ம் ஆண்டின் 'மிஸ் யூனிவெர்ஸ் ஆஸ்திரேலியா' பட்டத்தை வென்றிருக்கிறார்.
இவர், இந்த ஆண்டு நடைபெற விருக்கும் 'பிரபஞ்ச அழகிப் போட்டியில்', ஆஸ்திரேலியா சார்பாகப் பங்குபெறப் போகிறார்.
26 அழகிகளை பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடிய பிரியா, "நான் இன்னும் பன்முகத் தன்மையைக் காண விரும்புகிறேன்.
என்னைப் போல தோற்ற மளிக்கும் மற்றும் எனது பின்னணியைக் கொண்டவர் களும் இங்கே இருக்கிறார்கள் என்பது அற்புதமாக இருக்கிறது.
நான் இதற்கு முன்பு எந்த அழகிப் போட்டிகளி லும் பங்குபெறவில்லை. மாடலிங் செய்ததில்லை. இது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்பினேன்" என்று கூறினார்.
மேலும், இன்ஸ்டா கிராமில் தன் புகைப்படத்தோடு, "கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று என்னால் நம்ப முடிய வில்லை.
இது வரை நீங்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கு மிகப் பெரிய நன்றி" என்று கூறி பதிவிட்டிருந்தார்.
26 வயதான பிரியா, கர்நாடகாவில் பிறந்தவர். தன் பெரும்பாலான குழந்தைப் பருவத்தை ஐக்கிய அரபு நாடுகளில் கழித்தார். பிறகு, பதினோராவது வயதில் ஆஸ்திரிலியாவிற்கு குடிபெயர்ந்தார்.
சட்டக் கல்லூரி மாணவியான இவர் தன் வாழ்நாளின் பெருமை மிக்கத் தருணமாக நினைப்பது, திமோர் - லெஸ்டேவில் ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தில் தனது இன்டர்ன்ஷிப்பை முடித்து தான்.
தற்போது பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
Tags:
Thanks for Your Comments