"வேண்டாம்.. வேண்டாம்.."ன்னு வீட்டில் இருப்பவர்களே சொல்லி விட்டார்கள்.. படிக்கிற ஸ்கூல், காலேஜிலும் வேண்டாம் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் ஜப்பான் நாட்டுக்கார் மட்டும் நீங்கள் எனக்கு "வேண்டும்" என்று கூப்பிட் டுள்ளார்கள்.. யாரை தெரியுமா.. "வேண்டாம்" என்பவரை தான்!
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே போட்டை வட்டம் அருகே உள்ளது நாராயணபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் களுக்கு ஒரு வினோத பழக்கம். அதாவது தங்களுக்கு அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்தால், பிறந்த அந்த பெண் குழந்தைக்கு "வேண்டாம்" என பெயர் வைப்பார் களாம். இப்படி பெயர் வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
வேண்டாம்
அப்படித் தான் அசோகன் - கௌரி தம்பதிக்கு இரண்டும் பெண் குழந்தை. 3-வதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக பிறந்து விட்டதால், "வேண்டாம்" என்று பெயர் வைத்தார்கள். 4-வதாக ஆண் குழந்தை பிறந்ததா, இல்லையா என்பது இப்போது விஷயம் இல்லை.
கேலி, கிண்டல்
இந்த "வேண்டாம்" தான் விஷயமே. அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு, சென்னை அருகே உள்ள பிரைவேட் காலேஜில் ஸ்காலர்ஷிப் உதவியோடு என்ஜினியிரிங் 3-ம் வருடம் படித்து வருகிறார். ஸ்கூல், காலேஜ் என எல்லா இடங்களிலும் கூட படிப்பவர்களின் கேலி கிண்டல்கள்தான்.
அழுதார்
இந்த பெயரை சொல்லியே நோகடித் துள்ளனர். இதை வீட்டில் வந்து பெற்றோரிடம் நிறைய முறை சொல்லி அழுதுள்ளார் வேண்டாம். அதற்கு பெற்றோரும், காலேஜ் முடிந்தவுடன் பேர் மாற்றிக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லி உள்ளனர்.
ஜப்பான்
இந்த சமயத்தில் காலேஜில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ வில் சாதனை படைத்துள்ளார். தான் உருவாக்கிய தானாகவே இயங்கக் கூடிய கதவின் விளக்கத்தை ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனத்திடம் எடுத்து சொல்லி உள்ளார்.
வேலை
வேண்டாம் சொன்ன இந்த விளக்கத்தைக் கேட்ட ஜப்பான் நாட்டு நிறுவனம் தான், "நீங்கள் எங்களுக்கு வேண்டும்" என்று சொல்லி, வேலைக்கும் கூப்பிட்டுக் கொண்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தில் வேண்டாம் சம்பளம் வருஷத்துக்கு 22 லட்சமாம்.
தூதுவர்
விஷயத்தை கேள்விப் பட்டதும், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் இந்த சாதனை பெண்ணை கூப்பிட்டு, வாழ்த்து சொன்னார். அது மட்டு மில்லை.. "பெண் குழந்தை காப்போம் பெண் குழந்தையை கற்பிக்கும்" என்று மாவட்ட சிறப்புத் தூதுவராகவும் நியமித்துள்ளார்.
இனி மேலாவது பொம்பளைப் புள்ளை வேண்டாம்னு சொல்லா தீங்கய்யா.. அவங்க இருந்தா தான் நாடும் வாழும், வீடும் வாழும்.
Thanks for Your Comments