ஆம்னி பேருந்து களுக்கு இதுவரை சாலை வரியை தவிர எந்த வரியும் இல்லை என்ற நிலையில், புதிதாக தமிழக அரசு வரிவிதிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்து களின் கட்டணம் பெரிய அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சொகுசாக செல்ல மக்கள் விமானத்தை நாடுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் வசதியானர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் முதலில் நினைப்பது ஆம்னி பேருந்து களைத் தான்.
ஏனெனில் ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து கடைக்கோடி நகரான கன்னியா குமரிக்கும் 12 மணி நேரத்தில் சென்று விடுகிறார்கள். மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களை எட்டு மணி நேரததில் அடைந்து விடுகிறார்கள்.
படுக்கை வசதி பஸ்க்கு வரி
குளுகுளு வசதி மற்றும் படுக்கை வசதி இருப்பதால் அலுப்பு தெரியாமல் தூங்கி எழுந்து காலையில் ஊருக்கு வந்து விடுவார்கள். இதே போல் ஊரில் இருந்து சென்னைக்கும் மக்கள் சென்று விடுவார்கள்.
இப்படி சொகுசான பயணத்தை அளிக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இனி உயரப் போகிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல.. அதிகமாகவே உயர வாய்ப்பு உள்ளது.
இதுவரை வரியில்லை
ஏனெனில் ஆம்னி பேருந்து களுக்கு இதுவரை சாலை வரியை தவிர எந்த வரியும் இல்லை. இப்போது படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து களுக்கு வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்து களுக்கு புதிதாக வரி விதிக்கும் புதிய போக்கு வரத்து மசோதாவை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
3 மாதத்திற்கு ரூ.3,000 வரி
இந்த மசோதாவின் படி ஆம்னி பேருந்துகளில் ஒரு படுக்கை வசதிக்கு மூன்று மாதத்திற்கு ரூ.4,000 வரி விதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
இத்துடன் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளில் ஒரு இருக்கை வசதிக்கு மூன்று மாதத்திற்கு ரூ.3,000 வரி விதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
பேருந்து உரிமை யாளர்கள் ஷாக்
இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஆம்னி பேருந்து உரிமை யாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அரசு பேருந்துகளின் கட்டணமும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தற்போது சிறிய அளவிலேயே வேறுபாடு என்று இருக்கும் நிலையில் இனி வரி விதிக்கும் அரசின் முடிவால் பெரிய அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Thanks for Your Comments