இது நடந்தது இந்தியாவில் அல்ல. நம் அண்டை நாடான பங்களாதேஷில் தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி யொன்றின் ஆங்கிலப் பேராசிரியரான மசூத் மமூத்திற்குத் தான் இப்படியொரு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கி றார்கள்.
அவரது மாணவர்கள். மசூத், மாணவர்களு க்குப் பாடம் எடுக்கையில் தொடர்ந்து அவரது சொற்பொழிவு களில் பொருத்த மற்றதும், ஆபாசமானது மான கருத்துக்களும், சொல்லாடல் களும் இடம் பெறுவது வாடிக்கை என்று குற்றம் சாட்டும் மாணவர்கள்.
இது குறித்து கடந்த ஏப்ரலில் மாதத்தில் நாட்டின் துணை கல்வி அமைச்சருக்கு புகார் அளித்திருந்த தாகக் கூறுகின்றனர். மாணவர் களின் புகாரைத் தொடர்ந்து பல்கலைக் கழக அதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தனர். ஆனால், அப்போது மாணவர்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக எதுவும் கண்டறியப் படவில்லை என்கிறது சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம்.
மண்ணெண்ணெய் தாக்குதலுக்கு உட்பட்டு தீக்காயங் களுடன் தப்பியுள்ள பேராசியர் மசூத் இச்சம்பவம் குறித்துப் பேசும் போது, கல்லூரியில் கட்டுக் கடங்காத மாணவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் திடீரென்று என்னை என் அலுவலகத்தி லிருந்து இழுத்து என் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டனர்.
எனது அலறல் சத்தம் கேட்டு பிற மாணவர்களும், ஆசிரியர்களும் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டிய தாயிற்று. என் சொற்பொழிவு களில் நான் ஒரு போதும் ஆபாசக் கருத்துக்களைப் புகுத்திய தில்லை. இது முற்றிலும் எனக்கு எதிரான கருத்துக் களையும், பகைமையையும் உண்டாக்கும் விதமான பொய்யான குற்றச்சாட்டு. என்கிறார்.
இச்சம்பவம் குறித்துத் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட சிட்டகாங் ஆசிரியர் சங்கத் தலைவரான ஜாகிர் ஹுசைன், மாணவர்கள், பேராசியர் ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றதைக் கண்டு நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம். இது மிகவும் அராஜகமான செயல்.
இப்படி யான மோசமான செயல்களில் ஈடுபட முயன்ற குற்றவாளி களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். என்று நாங்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறோம் என்றார்.
அதை விட்டு விட்டு தாங்கள் விரும்பாத பேராசிரியர் எனும் ஒரே காரணத்துக் காக அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றது எந்த விதத்திலும் நல்ல மாணவர்க ளுக்கு அழகல்ல. அப்படிப் பட்டவர்களை மாணவரக ளாகவே மதிக்க முடியாது.
மேற்கண்ட விவகாரத்தில் தவறு யார் பக்கம் என்பதை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் உடனடியாகக் கண்டறிந்து இருதரப்பினரு க்கும் சமாதான மானதொரு முடிவை மாணவர்கள் முதல் முறை புகார் அளித்த போதே எட்டியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் விஷயம் இத்தகைய விபரீத எல்லைக்குச் சென்றிருக்கிறது.
இது நாட்டின் பிற மாணவர் களுக்கு ஒரு முன்னுதாரணச் சம்பவமாகி விடக்கூடாது. எனவே யார் உண்மையான குற்றவாளி என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை கல்லூரி நிர்வாகமும் காவல் துறையும் மேற்கொள்ள வேண்டும். என்று அக்கல்லூரி யின் இதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
Thanks for Your Comments