50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம் - சுவாரஸ்ய நிகழ்வு !

0
தெற்கு ஆஸ்திரேலியா வின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட் (9) ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்




அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்துக் கிடந்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதைக் கண்டு எலியட் எடுக்கச் சென்றான்.

அருகே சென்று எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது அது கடிதம் என்று. அந்த கடிதத்தை எடுத்து பிரித்து பார்த்த போது, அதன் மேற் பகுதியில் நவம்பர் மாதம் 17ம் தேதி, 1969ம் ஆண்டு என இருந்தது.
கடிதத்தை மேலும் படித்த போது அந்த கடிதம், 'இங்கிலாந்தில் இருந்து மெல்போர்னு க்கு குடிபெயர்கிறேன். கப்பலில் இருந்து கடிதத்தை எழுதுகிறேன். 

யார் இந்த கடிதத்தை பெறுகிறீர்களோ, அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள்' எனும் செய்தியை தாங்கி வந்திருந்தது.




இதனையடுத்து அந்த கடிதத்தை எழுதிய கில்மோரோ வுக்கு, எலியட் தற்போது பதில் கடிதம் அனுப்பி யுள்ளான். 

இந்த கடிதத்தை கில்மோரோ எழுதும் போது அவருக்கு 13 வயதே ஆனது. இப்போது அவருக்கு 63 வயதாகி விட்டது. இவர் மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந் துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings