காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் தாடியுடன் திருப்பதி ரயில்வே காவல் துறையின் பிடியில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தூப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினார்.
இந்த சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சமூக செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னை யிலிருந்து நாகர்கோயிலு க்கு ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரைக் காணவில்லை.
இதை யடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞரு மான ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, போலீஸாரின் விசாரணை சரியான திசையிலும், புதிய கோணத்திலும் நடந்து வருவதாகவும்,
இந்த விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விசாரணை குறித்த விவரங்களை இந்த சூழலில் வெளியிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 8 வார காலத்துக்கு ஒத்தி வைத்து உத்தர விட்டனர்.
இந்நிலையில், முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் தன்னுடைய தொழில் சம்மந்தாக ஜோலார் பேட்டையில் இருந்து ராஜமுந்திரி சென்று கொண்டிருந்த போது சுமார் இரவு 7 மணியளவில் திருப்பதி ரயில் நின்றுள்ளது.
அப்போது சாமி கும்பிடுவதற்காக பிளாட்பாரத்தில் இறங்கிய தாகவும், அப்போது காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நேரில் பார்த்தேன்.
ஆந்திரா ரயில்வே போலீஸார் 3 பேர் அவரை பிடித்து அழைத்துச் சென்றதை பார்த்ததா கவும், அவர்கள் நடுவே முகிலன் முழக்கமிட்டு சென்றதை பார்த்துள்ளார்.
இதை யடுத்து ஆந்திர காவல் துறையின் பிடியில் தான் முகிலன் இருப்பதாக வும், முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடம் கூறினேன் என அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் தெரிவித்த தகவல் வெளியானது.
முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ஆந்திர போலீஸாரை தமிழக சிபிசிஐடி போலீஸார் தொடர்பு கொண்டு
முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க உதவிக் கோரியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் தாடியுடன் திருப்பதி ரயில்வே காவல் துறையின் பிடியில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
தாடியுடன் இருக்கும் முகிலனை திருப்பதி ரயில்வே போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியும்,
அப்போது கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்காதே என முழக்க மிட்டபடி முகிலன் செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
Thanks for Your Comments