முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்றது. இன்று மாலை 6.30 மணி வரை விவாதம் நடந்தது.
விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையான வகையில் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பின்னர் சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் பதில் அளித்தார்.
அதன்பின் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அப்போது காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை யில் பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் மசோதா எளிதாக நிறைவேறியது.
Thanks for Your Comments