1000 யானைகளைக் காப்பாற்றி விருது பெறும் வடகிழக்கு ரயில்வே !

0
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் காட்டுப் பகுதிகளில் அதிவேகமாகச் செல்லும் ரயில்களில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பது அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருக்கிறது. 
1000 யானைகளைக் காப்பாற்றிய வடகிழக்கு ரயில்வே
இதைத் தடுக்க நினைத்த வடகிழக்கு ரயில்வே (Northeast Frontier Railway)`பிளான் பீ' என்னும் இந்தப் புதிய முயற்சியைக் கையில் எடுத்தது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ள இடங்களில் இந்த விபத்துகள் நன்றாகவே குறைந்துள்ள தாக ரயில்வே தரப்பில் முன்பு தெரிவிக்கப் பட்டிருந்தது. 

முதன் முதலாக இந்த `பிளான் பீ' திட்டம் 2017-ம் ஆண்டு கவுகாத்தி அருகிலான இடங்களில் செயல்படுத்தப் பட்டது. இதன் அருகில்தான் காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா இருக்கிறது. 

இந்த திட்டத்தில் சாதனம் ஒன்று தேனீக் கூட்டத்தின் இரைச்சல் சத்தத்தைப் போன்ற ஒரு ஒலியை ரயில் தண்டவாளங்கள் அருகே ஒலிபரப்பும்.

தேனீக்களை முழுவதுமாக வெறுக்கும் யானைகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு ரயில் தண்டவாளங்களின் அருகே வராமல் இருக்கும். 
இந்தச் சத்தம் 400 மீட்டர்கள் வரை கேட்கும். இந்த முயற்சியின் மூலம் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் இதைப் பற்றிய ஒரு காணொலியுடன் டீவீட்டை சென்ற ஆண்டு பதிவிட்டிருந்தார். 

இது தவிர யானைகளைக் காக்க இரவு 9 முதல் காலை 7 வரை வேகக் கட்டுப்பாடு என வேறு சில மாற்றங்களும் செய்யப் பட்டுள்ளதாம். 

மேற்கொள்ளப் பட்ட முயற்சிகளால் ஐந்து வருடத்தில் சுமார் 1,014 யானைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறது என தெரிவிக்கப் படுகிறது.
1000 யானைகளைக் காப்பாற்றி விருது பெறும் வடகிழக்கு ரயில்வே
ஏற்கெனவே இவற்றின் இருப்பிடங்களான காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு எண்ணிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக 

யானைகள் குறைந்து வரும் நிலையில் ரயில்வே துறையின் இந்த `பிளான் பீ' முயற்சி அனைவரிடையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இப்போது இதற்காக 'best innovation award' என்ற விருதை இந்திய ரயில்வே யிடமிருந்து பெற்றிருக்கிறது வடகிழக்கு ரயில்வே. 
இதற்காக அங்கீகாரமும், மூன்று லட்சம் தொகையையும் பெரும் வடகிழக்கு ரயில்வே. யானைகள் பாதிக்கப்படும் 29 பகுதிகளைக் கொண்ட இந்த 

மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் ஐந்து வருடத்தில் சுமார் 1,014 யானைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings