பணியிடத்தை விட்டு வெளியே செல்வதற்கான விதியை மீறும் வி.ஏ.ஓ.-க்கள் மீதான புகார்களை விசாரிக்க அதிகாரி களை நியமிக்கு மாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூரை சேர்ந்த செல்வகுருநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தின் வி.ஏ.ஓ., விதியை மீறி வெளியூரில் தங்கி அன்றாடம் வந்து செல்வதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வி.ஏ.ஓ.க்கள் பணியிடத்தை விட்டு வெளியே செல்ல, அவர்கள் பணிபுரியும் தாலுகா வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது விதி என்று தெரிவித்தார்.
இதை மீறும் வி.ஏ.ஓ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் தலைமையில் வட்டாட்சியர் அந்தஸ்துள்ள இரு அதிகாரிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நியமித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப் பட்டது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். பணியிடத்தை விட்டு வெளியே செல்வதற் கான விதியை மீறும் வி.ஏ.ஓ.-க்கள் மீதான புகார்களை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூரை சேர்ந்த செல்வ குருநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தின் வி.ஏ.ஓ., விதியை மீறி வெளியூரில் தங்கி அன்றாடம் வந்து செல்வதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வி.ஏ.ஓ.க்கள் பணியிடத்தை விட்டு வெளியே செல்ல, அவர்கள் பணிபுரியும் தாலுகா வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது விதி என்று தெரிவித்தார்.
இதை மீறும் வி.ஏ.ஓ.க்கள் மீதான புகார்களை விசாரிக்க வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் தலைமையில் வட்டாட்சியர் அந்தஸ்துள்ள இரு அதிகாரிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நியமித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப் பட்டது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தர விட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
Thanks for Your Comments