கப்பலில் என்ஜின் பழுது நடுக்கடலில் 1,300 பயணிகள் !

0
நார்வே நாட்டைச் சேர்ந்த பயணிகள் கப்பல், 1373 பேரோடு கடல் சீற்றத்தின் நடுவே இயந்திர கோளாறு காரணமாக சிக்கிய நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு கப்பல் பத்திரமாக கரைக்கு திரும்பி உள்ளது.
கப்பலில் என்ஜின் பழுது நடுக்கடலில் 1,300 பயணிகள்
இரு தினங்களுக்கு முன் 'வைக்கிங் ஸ்கை' என்ற நார்வே நாட்டைச் சேர்ந்த பயணிகள் கப்பல், கடலில் சென்று கொண்டிருந்த போது பழுதாகி நின்றது. 

200 அடி நீளம் கொண்ட அந்த கப்பலின் ஒரு என்ஜின் பழுதாகி விட்டதாகவும், கப்பலில் மொத்தமாக மின்தடை ஏற்பட்ட தாகவும் தெரிகிறது. 
இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடும் கடல் சீற்றத்தின் நடுவே கப்பல் சிக்கிக் கொண்டது. பேரலைகள் கப்பலை அங்குமிங்கும் ஆட்டியது. 

கண்ணாடி களை உடைத்துக் கொண்டு கப்பலுக்குள் புகுந்த கடல்நீர், பயணிகள் தூக்கி வீசிய வீடியோக்கள் சமூக வலை தளங்கில் வெளியாகின. 

1373 பேர் அந்த கப்பலில் பயணித்து கொண்டிருந்த நிலையில், அனைவரையும் மீட்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 
ஆனால் கடும் கடல் சீற்றத்தின் காரணமாக மீட்புப் படகுகளால் கப்பலிடம் செல்ல முடியவில்லை. இந்நிலையில், பயணிகளை ஹெலிகாப்டர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மீட்க திட்டமிடப் பட்டது.

அதன் பின்னர் சுமார் 500 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். மீட்பு படையினர் கப்பலை நெருங்கிய பின்னர், கப்பல் மீண்டும் சரி செய்யப்பட்டு இயக்கப் பட்டது. 
அதன்பின் மீட்புப் படகுகளின் கண்காணிப்பில், கப்பல் பாதுகாப்பாக கரை வந்தது. கப்பலில் இருந்த சுமார் 900 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக வந்து சேர்ந்தனர். 

ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டாலும், உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings