ஹைதராபாத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ ஃப்ளைட் 6E 462 க்கு அன்று நேரம் சரியில்லை.
ஏனெனில் அதனுள் பிரயாணித்துக் கொண்டிருந்த இர்ஷாத் அலி எனும் 20 வயது இளைஞர் விமானம் பறந்து கொண்டிருக்கையில் நடுவில் கதவைத் திறந்து கொண்டு இறங்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்.
இதனால் விமானத்தி லிருந்து பிற பயணிகளிடையே அதிர்ச்சி பரவியதோடு இர்ஷாத் அலியைச் சமாதானப் படுத்தி நடுவானில் தரையில் குதிக்கும் முயற்சியைக் கைவிட வைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது என்கிறார்கள்.
இண்டிகோ விமானம் தரையிறங்க வேண்டியது கெளஹாத்தி விமான நிலையத்தில். ஆனால், வேறு வழியின்றி வலுக்கட்டாய மாகத் தரையிறக்கப் பட்டதோ புவனேஸ்வர் விமான நிலையத்தில்.
காரணம் அதனுள் பயணித்த இர்ஷாத் அலிக்கு ஏற்பட்ட மனநலக் கோளாறு. ஹைதராபாத்தில் அதிகாலை 4.50 மணியளவில் இண்டிகோ
விமானம் புறப்பட்டது முதலே இர்ஷாத் அலியால் பிரச்னை தொடங்கி விட்டிருக்கிறது என்கிறார்கள் பிஜூ பட்நாயஜ் விமான நிலைய அதிகாரிகள்.
இர்ஷாத் அலி, அமைதியிழந்த மனதுடன் விமானம் பறந்து கொண்டி ருக்கையில் நடுவானில் கதவைத் திறந்து கொண்டு வெளியில் குதிக்க முயன்றிருக்கிறார்.
பிற பயணிகளின் உதவியோடு அவரைச் சமாதானப் படுத்துவதற்குள் போதும், போது மென்றாகி விட்டது.
கடைசியில் ஒருவழியாக அப்துல் கரீம் எனும் சக பயணியின் உதவியால் இர்ஷாத அலியைக் கட்டுப்படுத்தி காலை 6.10 மணியளவில் புவனேஸ்வர் விமான நிலையத்தில்
விமானத்தைத் தரையிறக்கி இர்ஷாத் அலியை அங்குள்ள காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம் என்கிறார் விமான நிலைய இயக்குனரான SC ஹோட்டா.
இர்ஷாத் அலி, தனது தாயார் இறந்து விட்டதால் கெளஹாத்தி க்கு பயணப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. அங்கே அவருக்குச் சொந்தமாக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள்.
காவல்துறை நடைமுறைகள் முடிவுற்றதும் இர்ஷாத் அலியை புவனேஸ்வரில் இருக்கும் கேபிடல் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மனநலப் பரிசோதனை களை மேற்கொள்ள விருக்கிறார்களாம்.
இப்படியாக பயணிகளில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பாதிப்பினால் கெளஹாத் தியை விமானம் சென்றைடைய தாமதம் ஏற்பட்டு சுமார் 7.13 மணீயளவில் கெளஹாத்தி சென்றடைந்தது.
Thanks for Your Comments