ஆஸ்திரேலியா வில் இருக்கும் தங்களது தாயைப் பார்க்க இரண்டு சகோதரர் களுக்கு 5 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப் பட்டுள்ளது .
ஊழியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அலுவலகத்தை திறக்குமாறு உத்தரவிட்டு, உடனடியாக சகோதரர் களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பெங்களூரு பாஸ்போர்ட் மண்டல அலுவலர் கடந்த சனிக்கிழமை மாலை, கோரமங்கலா பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து ஆஸ்திரேலியாவில் மிகவும் கவலைக் கிடமான நிலையில்
சிகிச்சை பெற்று வரும் தங்களது தாயைப் பார்க்க, உடனடியாக சகோதரர்கள் இரண்டு பேருக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி ஊழியர்க ளுக்கு உத்தர விட்டார்.
அவர்கள் யார் என்றால், இரண்டு பெரிய வங்கிகளின் உயர் அதிகாரிகள்தான். கனரா வங்கி, தவரேகேரே கிளையின் பொது மேலாளர்
ஜி.வி. ரகுசேஷு மற்றும் விஜயா வங்கியின் பொது மேலாளர் ஜி.வி. ராம மோகன் ஆகியோர்தான் அவர்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆஸ்திரேலியா வில் இருக்கும் எங்களது உறவினர்க ளிடம் இருந்து சனிக்கிழமை போன் வந்தது.
அதில் பேசிய உறவினர்கள், ஆஸ்திரேலியா வைச் சுற்றிப் பார்க்கச் சென்ற எங்களது தாயார், அங்கு நிகழ்ந்த மிக மோசமான தீ விபத்தில் சிக்கி
படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்ப தாகவும், உடனடியாக ஆஸ்திரேலியா வருமாறும் கூறியதாகத் தெரிவித்தனர்.
தாயைப் பார்க்க வேண்டிய நிலையில், அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பாஸ்போர்ட் மண்டல அலுவலர் பாரத் குமார் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு உடனடியாக செயலில் இறங்கினார்.
ஊழியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அலுவலகத்தை திறக்குமாறு உத்தரவிட்டு, உடனடியாக சகோதரர் களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
இதன் அடிப்படையில் இருவருக்கும் இரவு 9.45 மணிக்கு பாஸ்போர்ட் வழங்கப் பட்டது.
இது குறித்து மண்டல அதிகாரி பாரத் குமார் கூறுகையில், ஒரு குடும்பத்தினர் சிக்கலில் இருக்கும் போது துரித கதியில் செயல்பட்டு அவர்களுக்கு உதவியதில் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.
Thanks for Your Comments