உலகில் எவராலும் ஏற முடியாத ஒரு சிகரம் !

0
இந்த உலகில் மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை. பிறப்பு என்ற ஒரு விஷயம் மட்டும் அவன் கையில் இல்லை. 
கதிர்வீச்சு - Radiation
மற்ற அனைத்தும் அவன் வாசபட்டு விட்டன.ஆனால் மனிதன் இன்னும் கைப்பற்ற முடியாத ஒரு மலை பற்றி இங்கு காண போகிறோம் .

திபெத் நாட்டில் உள்ள கைலாய மலையே அத்தகைய ஏற முடியாத சிகரம் ஆகும்.

எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் (29029 அடி) உயரம் கொண்டது ஆனால் அதன் உச்சி 4,000 க்கும் அதிகமான மக்களால் தொடப்பட்டுள்ளது. 
அதே சமயம் கைலாய மலை 6638 மீட்டர் (21778 அடி) மட்டுமே ஆகும். ஆனால் அதன் உச்சியை எந்த மனிதரும் இதுவரை தொடவில்லை ஏன்? 

இதற்கு உடல் ரீதியிலான இயலாமை, உயரம் காரணமாக சிரமம், அல்லது மனித கட்டுப்பாடு மற்றும் 

புரிதல் அப்பால் வேறு மூர்க்கமான மற்றும் விளக்க முடியாத காரணமா? என்பது தெரியவில்லை.

இந்த உன்னதமான மலையின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை புரிந்து கொள்ள ஒரு சிறிய முயற்சி இது .

மதங்களில் கைலாய மலை : 
ஹிந்து மக்கள் அனைவர்க்கும் கைலாய மலை தெரிந்த ஒன்று தான். 

ஹிந்து புராணங்களின் படி அழிக்கும் கடவுளான சிவன் பார்வதி தேவியுடன் கைலாய மலையின் சிகரத்தில் வசிக்கிறார் என்பது நம்பிக்கை. 

அத்தகைய கைலாய மலையை வலம் வந்தால் பாவம் தொலையும் என்பது நம்பிக்கை. 
ஹிந்து புராணங்கள் கைலாஷ் மலை முகடுகளின் நான்கு முகங்கள் நீல வண்ண கல் , ரூபி, ஸ்படிகம் மற்றும் தங்கம் ஆகிய வற்றிலிருந்து உருவாக்கப் படுகின்றன என்று கூறுகின்றன .

இந்து மதத்தில் மட்டும் கைலாயம் புனித மலை இல்லை. புத்தம், ஜைனம், மற்றும் மற்ற சில மதங்களும் கைலாயத்தை போற்றுகின்றன.

ஜைன மதத்தின் படி கைலாய மலையில் ஜைன மதத்தின் முதல் குரு ரிஷப தேவர் முக்தியடைந்தார் என்கின்றனர் .

கைலாயம் ஏன் ஏற முடியவில்லை ?

மத நம்பிக்கையின் படி இறைவன் உறையும் மலை கைலாயம் ஆகும் அதனால் நாம் அங்கு கால் வைக்க கூடாது என்று கூறுவர். 
ஆனால் கைலாய மலையை ஏறுவேன் என்று சொன்ன பலரும் மரணித்துள்ளனர் . 
இதனால் கைலாய மலையில் ஆன்மீகம் தவிர்த்து ஏதோ ஒரு மர்மம் இருப்பது புலனாகிறது. 

1999இல் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் ஒரு மாதம் கைலாய மலையில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் பல அதிர்ச்சி கரமான உண்மைகளை தெரிந்து கொண்டனர் .

அவர்கள் கயிலை மலை சிவனின் இருப்பிடம் என்பதை தாண்டி அது உலகில் உள்ள மிகபெரிய கூர்நுனிக் கோபுரம் (பிரமிட்) என்றும் கூறினர்.
ஏற முடியாத ஒரு சிகரம்
கயிலை மலையின் வடிவமும் இதை உறுதி படுத்துகிறது. விஞ்ஞானிகள் இந்த மலையில் இருந்து ஏதோ ஒரு கதிர்வீச்சு (radiation) வெளிப்படுவ தாக கூறுகின்றனர் 

அதனால் இந்த மலை ஒரு காலத்தில் அணு கதிர்வீச்சு மலையாக இருந்து இருக்கலாம் என்கின்றனர். 
மேலும் அவர்கள் கயிலை மலையை ஏறக்கூடாது எனும் கருத்தை இதற்கு ஆதாரமாக வைக்கின்றனர்.

மேலும் அவர்கள் கைலை மலையில் இருந்து 600 மைல் தொலைவில் உள்ள மக்காவ் குகைகளில் கண்டு பிடிகப்பட்ட ஒரு ஓவியம் கயிலை மலையை போல் இருந்தையும் ஆதரமாக கூறுகின்றனர்.

ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி கயிலை மலை ஒரு துகள் முடுக்கி ( particle accelarator ) எனவும், 

இந்த மலை வேற்று கிரகவாசிகள் அணு துகள்களை சேமிக்கும் மலையாக பயன்படுத்தினர் என்றும் ஒரு கருத்து உண்டு . .

ஒரு அமானுஷ்ய மலை :
கைலாயம் செல்லும் மக்கள் பலர் அங்கு அமானுஷ்ய மான பறக்கும் தட்டுகளை பார்த்ததாக கூறுகின்றனர். 

இந்த பறக்கும் தட்டுகள் மலையின் உள்ளே இருந்து வருகிறது என்று கூறுகின்றனர் . 
மேலும் இந்த மலைக்கு சென்றவர்களின் தோல் சுருங்கியது எனவும் , நகங்கள் வேகமாக வளர்ந்தன என்றும் அதனால் கயிலை மலையில் நேரம் வேகமாக செல்வதாக கூறுகின்றனர் .

இவை அனைத்தும் கைலாய மலை ஒரு ஆன்மீகம் கலந்த அமானுஷ்ய இடம் என்பதையே நிரூபணம் செய்கிறது .
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings