ஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரம் இருப்பதாக வீடியோ வெளியாகி உள்ளது. சிந்து சமவெளி நாகரீகம் குறித்து ஆய்வு நடத்தி வரும் இந்தியக் குழு ஈராக் பயணித்தது.
அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா என்ற மலையில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் செருகி,
மேலாடை அணியாத மன்னர் நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
கம்பீரமாக நிற்கும் சித்திரம் ராமரையும் வணங்கும் சித்திரம் அனுமானையும் குறிப்பதாகவும், அது குறித்து மத்திய வெளியுறவுத் துறை ஆய்வு நடத்த வேண்டு மென்றும் அந்தக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த சிற்பம் கி.மு 2000-ம் ஆண்டில் வாழந்த பழங்குடியினத் தலைவனை யும், அவரால் சிறை படுத்தப்பட்ட எதிரியையும் குறிப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments