அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அரணாகத் திகழும் சக்தி !

0
இந்த வார துவக்கத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்கி தற்போது அமர்நாத் குகைக் கோயிலுக்கு பல்வேறு குழுக்களாக பக்தர்கள் சென்று வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலு மிருந்து ஆண்டு தோறும் லட்சக் கணக்கானோர் வருகை தருகின்றனர். 
அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு அரணாகத் திகழும் சக்தி



நடப்பாண்டிலும் 1.5 லட்சம் பேர் இதற்காக முன்பதிவு செய்துள்ளனர். புதன்கிழமை நிலவரப்படி, பனி லிங்கத்தை 13,800 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பலத்த பாதுகாப்புகளுக் கிடையில் 46 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரையில், இது வரை பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்துத் திரும்பி யுள்ளனர்.
மிகக் கடினமான பாதையில் பயணித்துத் தான் அமர்நாத் பனிலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. தங்களது இன்னுயிரை பணயம் வைத்து, அமர்நாத் பக்தர்களின் பயணத்தை பாதுகாப்பான தாக மாற்றுகிறார்கள் இந்த வீரர்கள்.



கொட்டும் பேரருவிக ளாகட்டும், மலைச் சரிவுகளில் உருண்டு விழும் கற்களாகட்டும் அனைத்தையும் மனித அரண்களாக மாறி பக்தர்களின் பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் இவர்களின் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். இந்த பணியை செய்யும் இவர்களும் தெய்வமாகவே தெரிகிறார்கள்.
கடந்த ஆண்டில் 2.85 லட்சம் பேர் அமர்நாத் குகைக் கோயிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-இல் 2.60 லட்சமாகவும், 2016-இல் 3.20 லட்சமாகவும், 2015-இல் 3.52 லட்சமாகவும் காணப்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings