பிரியங்கா காந்தியை காங். தலைவராக்க வலுக்கும் ஆதரவு !

0
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முன் மொழிந்து வருகின்றனர். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தும் கிடைக்க வில்லை. 
பிரியங்கா காங். தலைவர் வலுக்கும் ஆதரவு




அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தோல்வியைத் தழுவினார். இதை யடுத்து மே 25-ந் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி கடிதம் கொடுத்தார். ஆனால் காரிய கமிட்டி இக்கடிதத்தை நிராகரித்தது.

ராகுல் உறுதி

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி இந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
சோனியா குடும்பத்தின் கோபம்

ராகுல் காந்தி தமது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதால் கடந்த 50 நாட்களு க்கும் மேலாக யார் தலைவர் என்பதில் முடிவுக்கு வராமல் காங்கிரஸ் தடுமாறி வருகிறது. மூத்த தலைவர்கள் பலர்தான் காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்பது ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் எண்ணம்.

பிரியங்காவுக்கு ஆதரவு

இதனால் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஒட்டு மொத்தமாக கட்சி கமிட்டிகள் கலைக்கப் பட்டும் உள்ளன. 

இந்நிலையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உ.பி. முதல்வர் வேட்பாளர்
உ.பி. முதல்வர் வேட்பாளர்




கடந்த உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை முன்னிறுத்த லாம் என தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்துக்கு அறிவுரை கூறியிருந்தார். ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்ததால் படுதோல்வி அடைந்தது.

பிரியங்காவால் பலன் கிடைக்குமா?
இதை யடுத்து லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிரியங்கா காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக நியமித்தனர். லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி பிரசாரமும் செய்தார். ஆனாலும் அவரது பிரசாரம் மக்களிடத்தில் சென்று சேரவில்லை என்கிற பேச்சும் இருக்கிறது என்பது குறிப்பிட த்தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings