தமிழகத்தின் உள், கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை !

0
ஜூலை 9ம் தேதியான இன்று முதல், முன்பே சொன்னது போல தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கி யுள்ளது. ஜூலை 9ம் தேதி முதல் சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார். 
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை



ஆனால் அது பற்றி எந்த பதிவும் இல்லையே, மழையையும் காணோமே என்று புலம்பியவர் களுக்காக இதோ அவரே சொல்கிறார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்ப தாவது, நமது நாட்கள் தொடங்கி விட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. 
விரைவில் வெப்பச் சலன மழை கடற்கரையோர மாவட்டங் களுக்கும் இடம் பெயரும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையானது நாளைக்குப் பிறகு மெல்ல குறையும். பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே தேனி பகுதியும் இன்று மழையைக் கொண்டாடும்.

திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும். அதே போல புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளிலும் மழை உண்டு. அவ்வளவு ஏன், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பைப் பொறுத்தவரை, கால சூழ்நிலைகள் ஒரு நாள் மழைக்கான வாய்ப்பை பறித்துச் சென்றாலும், அடுத்த நாள் அதே மழையைத் தந்து விட்டுப் போகும். 



எனவே இது மக்களின் பார்வையைப் பொறுத்தது. இன்று இரவு சென்னையில் மழை வருமா என்று நான் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  வானிலையை கண்காணிக்க இணைய தளமும், கருவிகளும் இருந்தாலும் கூட அதனை முன்கணிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை மக்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள்.
தயவு செய்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு, உங்களை இந்த பேஸ்புக் பக்கத்தில் இருந்து தடை செய்ய வைக்க வேண்டாம். மழை பெய்தால் மகிழ்ச்சி அடையுங்கள். பெய்ய வில்லை என்றால் விட்டு விட்டுப் போய் விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings