நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி (62). தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி யின் கணவர் முருக சங்கரன் (72) நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்களது வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் இருக்கிறது.
அவர்களின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (37) என்பவர் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே, முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வேலைகார பெண் மாரி ஆகியோர் நேற்று முன்தினம் கொலை செய்யப் பட்டனர்.
முன்னாள் மேயர் மகேஸ்வரி உடலுக்கு தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், நெல்லையில் கொல்லப்பட்ட முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்தி னருக்கு தி.மு.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Thanks for Your Comments