ஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. ஜோசியரை வரவழைத்து பார்த்த துர்கா !

0
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்தித்து ஜோதிடம் பார்த்த போட்டோக்கள் இணைய த்தில் வைரலாகி வருகின்றன. திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். 
ஜோசியரை வரவழைத்து பார்த்த துர்கா



இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார். அவர் எப்போ தெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போ தெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். "இதுவா திமுகவி னரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங் களும் எழும்.

விளக்கம்
இதற்கு ஸ்டாலின் "எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒரு போதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களு க்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள் கின்றனர்" என்று பலமுறை விளக்கம் அளித்துள்ளார்.

ராஜாத்தி அம்மாள்

சமீபத்தில் கூட அத்திவரதரை தரிசிக்க துர்கா ஸ்டாலின், காஞ்சிபுரம் சென்று வந்தார். நேற்று மறைந்த கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் அத்திவரதரை தரிசிக்க சென்றார். கருணாநிதி குடும்பத்தில் 2 பேர் அடுத்தடுத்து கோயில் களுக்கு சென்றது கூட பரபரப்பாக பேசப்பட்டது.

பாலாஜி ஹாசன்

இந்நிலையில் தான், துர்கா ஜோதிடரை சந்தித்து பேசும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அகில இந்திய ஃபேமஸ் ஜோதிடர் பாலாஜி ஹாசனைதான் துர்கா சந்தித்து பேசி உள்ளார். இவர், ஜோதிடர்களுக் கான மாநாடுகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றவர். 

ஜெகன்மோகன் அரியாசனம் ஏறுவார் என்றார்.. மோடிதான் திரும்பவும் பிரதமர் என்றார், உலக கோப்பையில் இந்தியா நூலிழையில் கோப்பையை தவற விடும் என்றார்.. இப்படி மொத்த விஷயத்தையும் ஏற்கனவே புட்டு புட்டு வைத்தவர்.

புகைப்படங்கள்

இவர் சொல்லி வரும் விஷயங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அப்படியே நடந்து வருவதால் எல்லாரும் ஷாக் ஆகி போனார்கள். இவரை தான் துர்கா வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிலுள்ள வர்களின் ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்லி உள்ளார். 
ஸ்டாலின் முதல்வராய்டுவார்



அதற்கு அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்று அடித்து சொன்னாராம் பாலாஜி. துர்காவும், ஜோதிடரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யதார்த்தம்

ஊருக்கே பகுத்தறிவு பாடம் எடுக்கும் ஒரு குடும்பத்தில் இருப்பவருக்கு எட்டாதா அந்த பாடம் என்று பொத்தாம் பொதுவாக திராவிடர் கழக குடும்பங்களை சிலர் விமர்சித்து வருவது இயல்பு. 
ஆனால் பகுத்தறிவு என்பது தானாக தனக்குள் ஏற்படுவது, அது யார் சொல்லியும், கட்டாயப் படுத்தியும் ஒரு போதும் வருவது கிடையாது என்பது தான் வாழ்வின் யதார்த்தம். இது கருணாநிதி குடும்பத்து க்கும் பொருந்தும்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings