மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ள சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மாம்பலம் சட்டம்- ஒழுங்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் மதன். இவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதனை பொது மக்கள் யாரோ படம் எடுத்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை போலீசில் புதிய செயலி ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு இருந்தது. அதில் சப்-இன்ஸ்பெக்டர் மதன் ஹெல்மெட் அணியாமல் சென்ற போட்டோக்கள் அடங்கிய புகார் 2 முறை பதிவாகி உள்ளது.
இது பற்றி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப் பட்டது. இதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் மதன் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி பிறப் பித்துள்ளார்.
போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்வது தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஐகோர்ட்டு ஏற்கனவே எழுப்பி யுள்ளது.
இந்த நிலையில் பொது மக்களின் புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த நிலையில் பொது மக்களின் புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments