காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நேற்று முன்தினம் முதல் பக்தர் களுக்கு தரிசனம் தருகிறார். ஏராளமான பக்தர்கள் வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நேரம் நீட்டிக்கப் பட்டு உள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக வும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அத்திவரதர் வைபவம் நடைபெறும் நிலையில், நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் எழுந்தது. இதை யடுத்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீடீரென தீக்குளித்தார்.
இதில் படுகாயம் அடைந்த குமாரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments