உடலில் இரத்த சோகை ஏற்படுத்தும் அறிகுறிகள்?

0
நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை (Anemia) என்கிறோம். 
உடலில் இரத்த சோகை ஏற்படுத்தும் அறிகுறிகள்?
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. 
நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள் தான்.

ஒருவரது உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

நகம் உடைதல்:

உங்கள் நகம் அடிக்கடி எளிதில் உடைந்து கொண்டே இருந்தால், இரத்த சோகை உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
வெளிரிய தோல்:

உங்கள் தோல் வெளுத்து போய், சற்று வீக்கத்துடன் காணப்பட்டால், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

ஹீமோ குளோபின் அளவு குறைவு:

இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு சாதாரண அளவை விட குறைவாக இருந்தால், உங்கள் உடலில் இரத்தம் மிகவும் குறைவாக உள்ளது.
வயிற்று அல்சர்:

வயிற்று அல்சரால் அவஸ்தைப்பட்டு வந்தால், அப்போது உடலினுள் அதிக படியான இரத்த கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
படபடப்பு:

நீங்கள் அடிக்கடி படபடப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற் கான வாய்ப்பு உள்ளது.

மார்பு வலி:
உடலில் இரத்த சோகை ஏற்படுத்தும் அறிகுறிகள்?
அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால், இதயத்தில் மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். 

உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால், இதயம் சற்று கடினமாகவும் அதிகமாகவும் வேலை செய்ய வேண்டியிருந்து, அதனாலும் நெஞ்சு வலியை உணரக்கூடும்.
குறிப்பு:

கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்தில் இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings