அரங்கேறிய கொலை மிரட்டல் கொடூரங்கள் - நிர்வாண பூஜை !

0
இந்த உலகம் முழுவதும் பெண்களு க்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்துமே அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே நடந்து வருகிறது என்பது தான் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
அரங்கேறிய கொலை மிரட்டல் கொடூரங்கள்



சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கர்நகர் பகுதியை சார்ந்தவர் புஷ்பா. இவர் புரட்சி கரசோ‌ஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சேலத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்.,
எனது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இறந்து விட்டார். இதற்கு பின்னர் நானும் எனது மகனும் கூலித் தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். நான் அங்குள்ள சங்கர் நகர் பகுதியில் வசித்து வருகிறேன்.

நான் வாடகைக்கு இருந்த வீட்டில் உள்ள வீட்டு உரிமையாளரின் மகன் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பலரிடம் இரிடியம் வாங்கி வைத்து பூஜை செய்வதாக தெரிவித்து., அவரை காண பலரும் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில்., இவரது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பெண்களை இருடிய பூஜைக்கு வரவழைத்து பெண்களை நிர்வாணப்படுத்தி பூஜை செய்து வந்தான். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை அவனது உறவினர் வீடியோ எடுத்து வைத்து கொள்வான். 

பின்னர் அந்த பெண்கள் மீண்டும் பூஜைக்கு வரவில்லை என்றால்., அவர்களின் வீடியோ பதிவை காண்பித்து மிரட்டி வந்தான். இந்த காரியத்தை தொடர்ந்து செய்த வந்த நிலையில்., இவனின் செயலுக்கு பயந்த பெண்கள் தனது கணவருடன் சண்டை யிட்டு வீட்டை காலி செய்து சென்றனர். 



இந்த நிலையில்., இதனை போன்று என்னிடம் கூறி நிர்வாணா பூஜைக்கு கட்டாயப் படுத்தி இருந்தான். இதனை ஏற்க மறுத்த என்னிடம் நான் கொடுத்திருந்த பத்திரங்களை திருப்பி கொடுக்க ரூ.1 இலட்சம் வழங்க கூறி கூறினான்.
இது மட்டுமல்லாது உன்னை பற்றி அவதூறாக கூறி அசிங்கப் படுத்துவேன் என்றும் கூறி மிரட்டி வந்துள்ளான். அப்பாவி பெண்கள் இவனிடம் சிக்கி சீரழிந்த நிலையில்., இவன் மீண்டும் திரும்பி கூப்பிட்டு வரவில்லை என்றால் விடியோவை இணையத்தில் வெளியிடுவ தாக மிரட்டுவான் என்று கூறியுள்ளார். 

இது மட்டுமல்லாது இந்த கொடூரனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings