அமெரிக்காவின் ஒஹியோ மாநில நீதிமன்றத்தில் சிறுவர் களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருந்தவர் டிரேசி ஹண்டர். இவருக்கு ஸ்டீபன் எனும் சகோதரர் உள்ளார்.
ஸ்டீபன் மீது வாலிபர் ஒருவரை தாக்கியது தொடர்பாக டிரேசி நீதிபதியாக இருந்த போது வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்கில் டிரேசி, ஸ்டீபனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி யுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்மீது வழக்கு தொடரப் பட்டது. இதில் டிரேசி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இது தொடர்பாக மேல் முறையீடு மனு, சமீபத்தில் நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது டிரேசியை காவலில் வைத்து விசாரிக்கு மாறு நீதிபதி உத்தர விட்டார். டிரேசி அங்கிருந்து நகர மறுத்து விட்டார். இதனால் காவல் துறையினர் அவரை தரதரவென இழுத்துச் சென்றனர்.
பின்னர் டிரேசியின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர் குற்றவாளி இல்லை எனவும் கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Thanks for Your Comments